Published:Updated:

``நான் அமுதா பேசுறேன்" பெண் குரலில் பேசிய ஆண்;தன்பாலின ஈர்ப்பு வீடியோவால் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில், சடலமாகக் கிடந்த முருகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், கடந்த 15-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மாசார்பட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, போலீஸார் அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், எட்டயபுரம் அருகிலுள்ள மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பது தெரிய வந்தது. முருகனின் சடலத்தின் அருகில் கிடந்த மது பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவை கிடந்தன.

கொலை செய்யப்பட்ட முருகன்
கொலை செய்யப்பட்ட முருகன்

அதனால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கருதி, சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எட்டயபுரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சடலமாகக் கிடந்த முருகனுடன் ஒரு நபர் நடந்து சென்றது தெரியவந்தது. மேலும், முருகனின் செல்போனைக் கைப்பற்றி அதனை ஆய்வு செய்தபோது, ஒரு நம்பரில் இருந்து முருகனின் போனுக்கு அடிக்கடி போன்கால் வந்தது தெரிய வந்தது.

அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது, அது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், காஞ்சிபுரம் முருகன் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினார். முருகனின் செல்போன் டவர் மூலம் கண்காணித்து போலீஸார், அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில், சடலமாகக் கிடந்த முருகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

காஞ்சிபுரம் முருகனை அழைத்துச் செல்லும் மேல ஈரால் முருகன்
காஞ்சிபுரம் முருகனை அழைத்துச் செல்லும் மேல ஈரால் முருகன்

கொலைக்கான காரணமாக அவர் சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்து போயினர். போலீஸரின் விசாரணையில் கூறிய முருகன், “நான் காஞ்சிபுரத்துல 12-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். கார், வேன்களுக்கு கூலிங் கண்ணாடி தயாரிக்கிற கம்பெனியில வேலை பார்த்துட்டு வர்றேன். ரெண்டு வருசத்துக்கு முன்னால என்னோட பேஸ்புக்கிற்கு அமுதாங்கிற பேருல ’ஹாய்’னு மெசேஜ் வந்துச்சு. நானும் தொடர்ந்து பேஸ்புக்ல மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சேன். ஒரு மாசத்துல ரெண்டு பேரும் செல்போன் நம்பர்ல பேசினோம். ரெண்டு பேரும் போட்டோக்களையும் ஷேர் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உன்னை நேர்ல பார்க்கணும்னு சொல்லி இந்த வருஷம் பிப்ரவரி 14-ம் தேதி லவ்வர்ஸ் டேயில மதுரைக்கு வரச் சொன்னேன். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுல மீட் பண்ணலாம்னு பேசி முடிவு பண்ணியிருந்தோம். நான் காஞ்சிபுரத்துல இருந்தது 13-ம் தேதி மாலையில கிளம்புனேன். பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும் அமுதாவோட போன் நம்பருக்கு போன் பண்ணினேன். ஆனா, அடுத்த பத்து நிமிசத்துல நான் அமுதா இல்ல. அமுதாங்கிற பேர்ல பெண் குரல்ல உங்ககிட்ட பேசுனேன்.

கொலை செய்த காஞ்சிபுரம் முருகன்
கொலை செய்த காஞ்சிபுரம் முருகன்
மாமனாரைக் கொலை செய்த மருமகன்; முன்னாள் தி.மு.க எம்.பி பேரன் படுகொலையில் நடந்தது என்ன?

என் பேரு முருகன்னு சொன்னதும் நான் முதலில் நம்பல. அதுக்குப் பிறகு அந்த செல்போனுக்கு நான் அனுப்பின மெசேஜ்களைக் காட்டினதும் எனக்கு கோவம் வந்துச்சு. பஸ் ஸ்டாண்டுல வச்சே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் சமாதானம் ஆனோம். என்னை வற்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். அதை அவன் செல்போன்ல எனக்குத் தெரியாம வீடியோவும் எடுத்து வச்சிருந்திருக்கான்.

நான் உடனே அங்க இருந்து காஞ்சிபுரத்துக்கு கிளம்பிட்டேன். ஊருக்குப் போனதும் அந்த சிம்கார்டை மாத்திட்டு, புது சிம்கார்டு போட்டேன். நாங்க லவ் பண்றதா சொன்னதுனால எங்க அம்மா, தங்கச்சிகிட்ட அமுதாங்கிற பேர்ல அவன் ஏற்கெனவே பேசிருக்கான். அதனால, அம்மாவோட போன் நம்பருக்குப் போன் செஞ்சு, ‘உங்க மகனும் நானும் விரும்புறோம். அவன் எங்கூட ஒன்னா இருந்த வீடியோ எங்கிட்ட இருக்கு. அவன் என்னைப் பார்க்க ரெண்டு நாள்ல நேர்ல வரணும். இல்லேன்னா அந்த வீடியோவை வெளியிட்டுருவேன்” என மிரட்டியபடி பேசியிருக்கான். அந்த வீடியோவை அழிக்கச்சொல்லி எவ்வளாவோ கெஞ்சுனேன்.

முருகனை கைது செய்த போலீஸார்
முருகனை கைது செய்த போலீஸார்

ஆனா, அவன் கேட்கலை. ரூ.50,000 பணம் கொடுத்தா அழிக்கிறேன்னு சொன்னான். வீடியோவை எப்படியாவது அவன் செல்போன்ல இருந்தது அழிக்கணும்னு நினைச்சு, கடந்த 14-ம் தேதி காஞ்சிபுரத்துல இருந்து எட்டயபுரத்துக்கு வர்ற தகவலைச் சொன்னேன். எட்டயபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும் ரெண்டு பேரும் சரக்கு, சைட் டிஷ் எல்லாம் வாங்கிக்கிட்டு மேலக்கரந்தை காட்டுப்பகுதிக்குப் போனோம்.

நான் ஏற்கெனவே வாங்கிட்டு பைக்குள்ள வச்சிருந்த விஷத்தை, அவனுக்கே தெரியாம அவனோட டம்ளர்ல ஊத்தின சரக்குல கலந்துட்டேன். முதல் ரவுண்டு அடிச்சதும் அவனுக்கு லேசான மயக்கம் வந்துச்சு. எனக்கு அவன் மேல ஆத்திரம்தான் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல அவன் வாந்தி எடுத்து கீழே படுத்தான். ஆத்திரத்துல பக்கத்துல கிடந்த கல்லை அவன் தலையில போட்டுட்டு அங்க இருந்தது தப்பிச்சு ஓடிட்டேன்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் பேசினோம், “கொலை செய்யப்பட்ட மேலஈராலைச் சேர்ந்த முருகன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது அப்பாவுடன் விவசாயம் பார்த்துட்டு வந்தார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறேன்.

முருகனை கொலை செய்த மேலக்கரந்தை காட்டுப்பகுதி
முருகனை கொலை செய்த மேலக்கரந்தை காட்டுப்பகுதி

தன்னுடைய காதலியை பார்க்க போவதாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வந்துள்ளார். முருகனின் குரல் சற்று மெல்லிய குரலாக இருந்ததால் பெண் குரலில் பேசியிருக்கலாம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு