Published:Updated:

`காதலியைக் கடத்திவிட்டனர்' - நீதிமன்றத்துக்குள் கையை பிளேடால் அறுத்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு

ராமநாதபுரம் நீதிமன்றம்

ராமநாதபுரம் நீதிமன்றத்துக்குள் காதலியைச் சேர்த்து வைக்கக் கோரி முறையிட வந்த வாலிபர், நீதிபதி இல்லாததால் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

`காதலியைக் கடத்திவிட்டனர்' - நீதிமன்றத்துக்குள் கையை பிளேடால் அறுத்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு

ராமநாதபுரம் நீதிமன்றத்துக்குள் காதலியைச் சேர்த்து வைக்கக் கோரி முறையிட வந்த வாலிபர், நீதிபதி இல்லாததால் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
ராமநாதபுரம் நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் நீதிபதியைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் தலைமை நீதிபதி மாறுதலாகிச் சென்றுவிட்டதாகவும், புதிய நீதிபதி இன்னும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அப்போது திடீரென, `என்னுடைய காதலியைக் கடத்திவிட்டனர், அவரை என்னுடன் சேர்த்துவைக்க யாருமே இல்லையா’ என்று நீதிமன்றத்துக்குள்ளேயே தனது இடது கையில் பல இடங்களில் பிளேடால் அறுத்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் வாலிபரைத் தடுத்து நிறுத்தி, கையில் ரத்தம் கொட்டிய நிலையில் துணியால் கட்டுப்போட்டனர். பின்னர் கேணிக்கரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, அந்த வாலிபரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

பிரசாத்
பிரசாத்

சிகிச்சைக்குப் பிறகு காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் அருகேயுள்ள பெருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்பதும், வழிவிடு முருகன் கோயில் அருகேயுள்ள பேக்கரியில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``இவரும் ஆர்.எஸ்.காவனூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துவருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் பிரசாத் உறுதியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவரின் காதலியின் செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்துள்ளது. இதனால் காதலியைப் பார்க்க அவரின் வீட்டுக்கு பிரசாத் சென்றபோது பெண்ணின் பெற்றோர் `எங்கள் மகளுக்கு திருமணம் முடித்து வெளியூர் அனுப்பிவைத்துவிட்டோம். இனி எங்கள் மகளைத் தொந்தரவு செய்யக் கூடாது’ எனச் சத்தம் போட்டு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து முறையிடுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்த பிரசாத், நீதிபதி இல்லாததால் விரக்தியடைந்து பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன்னுடைய காதலியை அவரின் பெற்றோர் கடத்திவைத்திருப்பதாகவும், அவரைத் தன்னுடன் சேர்த்துவைக்கும்படியும் புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடத்திவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism