Published:Updated:

60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; சிக்கிய நபர் - தஞ்சை அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமைக் கொலையில் கைதுசெய்யப்பட்ட சாஸ்திரி

நீதிமன்றம் பகுதியில் இறந்து கிடந்த பெண், காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்தது. சாஸ்திரி என்ற நபர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; சிக்கிய நபர் - தஞ்சை அதிர்ச்சி

நீதிமன்றம் பகுதியில் இறந்து கிடந்த பெண், காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்தது. சாஸ்திரி என்ற நபர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமைக் கொலையில் கைதுசெய்யப்பட்ட சாஸ்திரி

தஞ்சாவூரில் 60 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அந்த நபரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, கொலை
பாலியல் வன்கொடுமை, கொலை

தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள புதிய நீதிமன்றம் பகுதியில் கடந்த 30-ம் தேதி இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த சிலர், போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றினர்.

அவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என அப்போதே போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் உடல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதியானது.

கொலை
கொலை
மாதிரிப் படம்

மேலும் விசாரணையைத் தொடர்ந்த போலீஸார், சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தென்கரையைச் சேர்ந்த ராமசாமி மகன் சாஸ்திரி என்ற நபர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்து கைதுசெய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில், `தஞ்சாவூர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 60 வயது மனநல குறைபாடுகொண்ட பெண்ணான அவர் அண்மையில் காணாமல்போனார்.

பெண்ணின் உறவினர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 28-ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீதிமன்றம் பகுதியில் இறந்து கிடந்த பெண் காணாமல்போன பெண் என்பது தெரியவந்தது. சாஸ்திரி என்ற இளைஞர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அந்தப் பெண் கீழே விழுந்திருக்கிறார்.

கைதுசெய்த போலீஸ்!
கைதுசெய்த போலீஸ்!

இதில் தலையில் பலமாக அடிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்த சாஸ்திரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுவந்த நாங்கள், பாலியல் வன்கொடுமை செய்து பெண்ணைக் கொலைசெய்த சாஸ்திரியைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்” எனத் தெரிவித்தனர்.