Published:Updated:

`காதலிப்பதாகக் கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை; காதலன் உட்பட 4 பேர் கைது!'

!
!

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து, 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு தெருவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, அதே பகுதியிலுள்ள கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அந்தக் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் காஞ்சிபுரம் வணிகர் வீதி பகுதியைச் சேர்ந்த குணசீலன் (23) என்பவர் இளம் பெண்ணிடம் தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பழகத் தொடங்கியிருக்கிறார். நட்பாகப் பேசிய குணசீலனை நம்பி அந்த பெண்ணும் தன்னுடைய மொபைல் நம்பர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ.டி ஆகியவற்றை அவரிடம் பகிர்ந்திருக்கிறார். இளம்பெண்ணைத் தனது காதல் வலையில் வீழ்த்திய குணசீலன் அவரிடம், "இந்தக் கடையில் நீ வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. நான் உனக்கு வேறு நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருகிறேன்' என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில், இளம்பெண்ணின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற குணசீலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தீட்டினார். அதன்படி, குணசீலன் அந்த பெண்ணைத் தனது பூர்வீக சொத்துக்கள் உள்ள, காஞ்சிபுரம் மாவட்டம், மேல்கதிர்பூர் கிராமத்திற்குச் சென்று வரலாம் என அழைத்திருக்கிறார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே, அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு மேல்கதிர்பூருக்கு காரில் விரைந்திருக்கிறார். அப்போது, பாதி வழியிலேயே ஓடும் காரில் குணசீலன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்திருக்கிறார்.

குணசீலன்
குணசீலன்

பின்னர், அந்த பெண்ணுக்குப் போதை அதிகமானதும் தன் நண்பர்களான சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெபநேசன் (29), ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (24), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அஜித் (25) மற்றும் காமராஜ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய மேல்கதிர்பூர் பண்ணை வீட்டிற்கு வருமாறு கூறி விட்டு, அந்த பெண்ணையும் அந்த பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதையடுத்து, தனது நண்பர்கள் அங்கு வந்தவுடன் பம்பு செட்டுக்கு அருகில் காரை நிறுத்திய குணசீலன் மது போதையிலிருந்த அந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார்.

குணசீலனும் அவரது நண்பர்கள் 4 பேரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த பெண் ஒரு கட்டத்தில் , காரின் கண்ணாடிகளை ஓங்கி அடித்துக் கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அப்போது, அவ்வழியாக விவசாய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் சிலர் சத்தம் கேட்டு காருக்கு அருகில் சென்றிருக்கின்றனர். அதிர்ந்து போனவர்கள், உடனடியாக கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கின்றனர்.

கிராம மக்கள் பம்பு செட்டை நோக்கி வருவதைக் கண்ட குணசீலன் உடனடியாக தனது நண்பர்களுடன் காரில் அங்கிருந்து தப்பியிருக்கிறார். பின்னர், வழியெல்லாம் அலறி துடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை கீழம்பி புறவழிச் சாலையில் இறக்கி விட்டு, குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பித்திருக்கின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த இளம்பெண் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் குணசீலன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார்.

Vikatan
மேல்கதிர்பூர்
மேல்கதிர்பூர்

இளம்பெண்ணின் புகாரைப் பெற்றுக் கொண்ட பாலுசெட்டி போலீஸார் சம்பவம் தொடர்பாக உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பாலுசெட்டி காவல் நிலையத்தில் வைத்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, இளம்பெண் அளித்த தகவல்களின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க சுதாகர் தனிப் படை ஒன்றினை அமைத்தார். காஞ்சிபுரம் முழுவதும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்திய போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் வைத்து குணசீலன், அஜித், குணசேகரன், ஜெபநேசன் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர். காமராஜர் என்பவர் மட்டும் போலீஸாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குணசீலன் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கடத்தல் என மொத்தம் 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார்,

கைதானவர்கள்
கைதானவர்கள்

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் நபரைத் தேடி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு