Published:Updated:

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கொலை - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

கொலை

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண், கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கொலை - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண், கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவல்லி. இவர் அந்தப் பகுதியிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் கணவர் ராஜேந்திரன். இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். ராஜேந்திரனுக்கும் அம்சவல்லிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கணவர், குழந்தைகளைப் பிரிந்து அவரின் சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்குச் சென்றிருக்கிறார் அம்சவல்லி.

கொலை
கொலை

அப்போது அதே ஊரில் கொத்தனார் வேலை பார்த்துவந்த ராஜு என்பவருடன் அம்சவல்லிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அம்சவல்லியும் ராஜுவும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன், மனைவியாக ஒரே வீட்டில் வசித்துவந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அம்சவல்லி, ஊருக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவரின் மகள் சங்கீதாவைச் சந்தித்து அம்சவல்லி பேசியிருக்கிறார். நீண்டகாலமாகப் பிரிந்திருந்த தாயும் மகளும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இதையடுத்து அம்மாவுடன் சங்கீதா, சென்னைக்கு வந்திருக்கிறார்.

சென்னையில் அம்சவல்லியும் சங்கீதாவும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். சங்கீதாவுக்குத் திருமணம் செய்துவைக்க ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருக்கிறார். விரைவில் அவருக்குத் திருமணம் நடைபெறவிருக்கும்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டுக்குள் சங்கீதா கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து அம்சவல்லி, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சங்கீதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணம்
பணம்

சங்கீதா அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் வீட்டிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும், சங்கீதாவின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணமும் எடுக்கப்பட்டிருந்தது. சங்கீதா கொலைக்குப் பிறகு அம்சவல்லியின் ஆண் நண்பர் ராஜுவும் தலைமறைவாகி விட்டார். அதனால் அவர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்திருக்கிறது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் சங்கீதா, பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் இறுதிக்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் சங்கீதா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.

இது குறித்து பூந்தமல்லி போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சிறுவயதில் அம்மாவைப் பிரிந்த சங்கீதா, தன்னுடைய அம்மாவுடன் வாழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சங்கீதாவின் அம்மா அம்சவல்லிக்கும் ராஜுவுக்கும் இடையே உள்ள பழக்கம், சங்கீதாவுக்கும், அவரின் அப்பா ராஜேந்திரனுக்கும் தெரியாது. அதனால்தான் அம்சவல்லியை நம்பி சங்கீதாவை சென்னைக்கு ராஜேந்திரன் அனுப்பிவைத்திருக்கிறார். சென்னையில் ஒரே வீட்டில் அம்சவல்லியுடன் தங்கியிருந்த ராஜு, அடிக்கடி சங்கீதாவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. சங்கீதா தங்கியிருந்த வீட்டுக்கு இரண்டு சாவிகள் இருந்திருக்கின்றன. அதில் ஒரு சாவி அம்சவல்லியிடமும் இன்னொரு சாவி ராஜுவிடமும் இருந்திருக்கிறது.

சம்பவத்தன்று, அம்சவல்லி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அப்போது ராஜு வீட்டுக்கு வந்து சங்கீதாவைக் கொலைசெய்துவிட்டு தங்க நகைகள், பணத்தை எடுத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அப்போது ராஜு, தன்னிடம் இருந்த சாவியைப் பயன்படுத்தி வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தலைமறைவாக உள்ள ராஜுவைத் தேடிக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ராஜு மீது மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மும்பையில் வேலை பார்த்த ராஜு அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்திருக்கிறார். அதன் பிறகு ஊருக்குத் திரும்பிய ராஜுவுக்கு இன்னும் சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ராஜுவைப் பிடித்து விசாரித்தால் மட்டுமே சங்கீதாவின் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.