Published:Updated:

சென்னை: `நட்சத்திர ஹோட்டலில் நள்ளிரவு பார்ட்டி; காரில் ஐடி நிறுவனப் பெண் அலறல்!' - என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐடி நிறுவனப் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
ஐடி நிறுவனப் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

நட்சத்திர ஹோட்டலில் மது விருந்தில் கலந்துகொண்டு காரில் சென்ற ஐடி நிறுவன ஊழியர், திடீரென `ஹெல்ப், ஹெல்ப்...’ எனச் சத்தம் போட்டார்

சென்னை தேனாம்பேட்டை, அண்ணா மேம்பாலம் அருகே நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஹோட்டலில் ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் பெண் உட்பட நான்கு பேர் மதுவிருந்தில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் காரில் வீடு திரும்பினர். அப்போது திடீரென காரிலிருந்து பெண் ஒருவர் `ஹெல்ப், ஹெல்ப்...' எனச் சத்தம் போட்டார். நள்ளிரவு என்பதால் சாலையில் ஒருசில வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. அதனால் பெண்ணுக்கு யாரும் உடனடியாக உதவ முடியவில்லை.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

இந்தச் சூழலில், காரிலிருந்து இறங்கிய பெண், நடுரோட்டில் அமர்ந்தபடி சத்தம் போட்டார். இந்தச் சமயத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் மது போதையிலிருந்தார். மேலும் காருக்குள் மூன்று இளைஞர்கள் இருந்தனர். அவர்களும் போதையில் இருந்தனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போதையில் இருந்ததால் அவர்களிடம் எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால் போதையிலிருந்தவர்களின் செல்போன்களில் அவர்களின் பெற்றோரைத் தொடர்புகொண்டு காவல் நிலையத்துக்கு வரும்படி தெரிவித்தனர். பின்னர் அவர்களோடு நான்கு பேரையும் அனுப்பிவைத்தனர்.

போதை தெளிந்த பிறகு இன்று அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நான்கு பேரும் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருவது தெரியவந்தது. மேலும் அவர்கள் நேற்றிரவு மது விருந்தில் கலந்துகொண்டிருந்திருக்கின்றனர். அப்போது நான்கு பேருக்கும் போதை அதிகமானதால் 23 வயதாகும் இளம்பெண்ணிடம் ஒருவர் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், தன்னுடைய செருப்பால் அந்த இளைஞரைத் தாக்கியிருக்கிறார். அதோடு காரிலிருந்து கீழே இறங்கி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.

`மனைவிக்குப் பாலியல் தொல்லை; நண்பனைக் கொலை செய்து வீசிய இளைஞர்!' - நடந்தது என்ன?
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

இளம்பெண்ணின் ஆடைகள் கிழிந்ததோடு, கலைந்திருந்தாகவும் போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் போதையிலிருந்தது துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் இளம்பெண் யார் மீதும் புகாரளிக்கவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு