Published:Updated:

மதுரை: வீடு புகுந்து இளம்பெண் படுகொலை... போலீஸ் தீவிர விசாரணை!

கொலை

வீடு புகுந்து இளம்பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை: வீடு புகுந்து இளம்பெண் படுகொலை... போலீஸ் தீவிர விசாரணை!

வீடு புகுந்து இளம்பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

மதுரை, பொன்மேனி குடியானவர் தெருவில் வசித்து வருபவர் பாண்டி. இவர் மகள் அபர்ணா (19). பாண்டி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், இன்று மாலை அவர் மகள் அபர்ணா மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து அபர்ணாவை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தனர்.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்த அருகில் வசிப்பவர்கள் உடனே எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

கொலை
கொலை

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலைசெய்யப்பட்ட அபர்ணா பிளஸ் டூ படித்தபோது விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்ததாகவும், அபர்ணாவை பெண் கேட்டு குடும்பத்துடன் வந்தபோது பெண் கொடுக்க அவர் வீட்டில் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அபர்ணாவுக்கு மற்றொருவருடன் திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்தத் தகவல் கேள்விப்பட்டு ஆத்திரத்தில் ஹரிகரன் கொலைசெய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை
கொலை

இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.