Published:Updated:

தன்பாலின ஈர்ப்பு: `நீங்கள் ஏன் தடுக்குறீர்கள்?’ - காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்

தன்பாலின ஈர்ப்பு ( Representational image )

தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் போலீஸ் விசாரணையின்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்ணால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பு: `நீங்கள் ஏன் தடுக்குறீர்கள்?’ - காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்

தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் போலீஸ் விசாரணையின்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்ணால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
தன்பாலின ஈர்ப்பு ( Representational image )

சேலம், தனியார் கல்லூரியில் படித்துவருகிறார் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஏரியூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பி.எஸ்சி படித்துவந்திருக்கிறார். இருவரும் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் பேருந்தில் செல்வது, ஒன்றாகச் சாப்பிடுவது, விளையாடுவது என இருந்துவந்திருக்கின்றனர்.

நாளடைவில் அவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் அவர்களில் ஒரு பெண்ணுக்கு படிப்பு முடித்தவுடன் கோவையில் வேலை கிடைத்திருக்கிறது. வேலையின் காரணமாக அந்தப் பெண் அங்கு சென்றுவிட்டார், இருப்பினும் செல்போனில் பேசியும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது சந்தித்துக்கொள்வதுமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வரும் பெண்ணின் பெற்றோருக்கு, கடந்த இரண்டு மாதங்களாக மகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றம் இருப்பது தெரியவந்து சந்தேகித்துள்ளனர். இதை அறிந்துகொண்ட அந்தப் பெண் கடந்த 30-ம் தேதி தன் பெற்றோரிடம், சம்பந்தப்பட்ட பெண்ணை விரும்புவதாகவும் அவளுடன் வாழப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட பெற்றோர் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது குறித்து ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

தன்பாலின ஈர்ப்பு: `நீங்கள் ஏன் தடுக்குறீர்கள்?’ - காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட இளம்பெண்

போலீஸார் இரண்டு பெண்களையும் ஆலோசனை கொடுப்பதற்காக நேரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக விசாரணை மற்றும் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில், நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு இளம்பெண்களுக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது இரு பெண்ணில் ஒருவர், `நாங்கள் சேர்ந்து வாழ்வதை ஏன் நீங்கள் தடுக்கிறீர்கள்... சட்டமே சேர்ந்து வாழ தடை விதிக்காதபோது நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கண்ணீர் வடித்து அழுததுடன், திடீரென தனது ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்து மற்றும் கைகளை அறுத்துக்கொண்டார்.

இதனால் பதறிப்போன போலீஸார் உடனே அந்தப் பெண்ணை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரவீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார்.