Published:Updated:

2020-ல் பதிவு திருமணம்; இப்போது திருமண நிகழ்ச்சி... முதலிரவுக்கு அடுத்தநாள் இளம்பெண் தற்கொலை

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2020-ல் பதிவு திருமணம்; இப்போது திருமண நிகழ்ச்சி... முதலிரவுக்கு அடுத்தநாள் இளம்பெண் தற்கொலை

சென்னையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 42 வயதாகும் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் இளங்கோ, கடந்த 2008-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்து விட்டார். நான் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லவில்லை. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளின் பெயர் சந்தியா (22). அவர், அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்தார். என்னுடைய மகனும் கல்லூரியில் படிக்கிறான்.

திருமணம் (மாதிரிபடம்)
திருமணம் (மாதிரிபடம்)

என்னுடைய கணவர் இளங்கோ மரணத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு சுரேஷ் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக நான் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய மகள் சந்தியாவுக்கும் என் கணவர் சுரேஷ் ஆனந்தின் அக்கா மகன் ராஜா என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதிவு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்துக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். என்னுடைய மகள் தனக்கு கொஞ்ச காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டதால் எவ்வித திருமண சம்பிரதாயம் செய்யாமல் தொடர்ந்து அவளைப் படிக்க வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு இருந்ததால் உறவினர்களை அழைத்து திருமணம் செய்யாமல் தள்ளி போட்டு வந்தோம். தற்போது கொரோனா ஊரடங்கு முடிவுற்றதால் திருமணம் செய்து வைக்கலாம் என இருவீட்டினரும் பேசி முடிவு செய்தோம். அப்போது என்னிடம் பேசிய என் மகள் சந்தியா, தான் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறினாள். உடனே நான் அது தவறு, உனக்கு பதிவு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி சந்தியாவை சமதானப்படுத்தினேன். கடந்த 4.3.2022-ம் தேதி சேலம் புதுபழனி முருகன் கோயிலில் என் மகள் சந்தியாவுக்கும் மருமகன் ராஜாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 5-ம் தேதி சென்னைக்கு வந்தோம். என் மகளும் மருமகனும் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள்.

தற்கொலை
தற்கொலை

பின்னர் 6.3.2022-ம் தேதி என் மகளுக்கும் மருமகனுக்கும் திருமண சம்பிரதாயம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் 7-ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு என் மகள் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினாள். நான் குளித்து விட்டு வருவதாகச் சொல்லி சென்று விட்டேன். என் மருமகன் ராஜா டிவி பார்த்துக் கொண்டிருந்தார். என் மகள் படுக்கையறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். குளித்து விட்டு வந்த நான் இன்னும் என் மகள் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கூப்பிட்டு பார்த்தேன். .அவள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதனால் நானும் என் குடும்பத்தினரும் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது என் மகள் சந்தியா. படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குமாட்டி தொங்கிபடி இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவளை உடனே கீழே இறக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். என் மகள் சிகிச்சையிலிருந்தபோது எழும்பூர் நீதிமன்ற நடுவர் அவளிடம் விசாரைணை செய்ய வந்தார். அவள் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் அவளிடம் விசாரணை நடத்த முடியவில்லை. சிகிச்சையிலிருந்த என் மகள் 10-ம் தேதி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என் மகளின் இறப்பின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்படி கொரட்டுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 7 நாள்களே ஆவதால் ஆர்டிஓ, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அம்பத்தூர் உதவி கமிஷனர் விசாரணை நடத்திவருகிறார்.

கொரட்டூர் காவல்நிலையம்
கொரட்டூர் காவல்நிலையம்

இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். அவரின் கணவர் ராஜாவிடமும் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளோம். கவிதா, ஒருவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அவர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. ஆர்டிஓ அளிக்கும் விசாரணை அறிக்கைக்குப் பிறகு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism