Published:Updated:

காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர்... கொலைசெய்த பெயின்ட்டர்! - காட்டிக் கொடுத்த சிசிடிவி

கொலை

நாமக்கல்லில் காரில் மதுபோதையில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலைசெய்ததாக, பெயின்ட்டர் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

காரில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபர்... கொலைசெய்த பெயின்ட்டர்! - காட்டிக் கொடுத்த சிசிடிவி

நாமக்கல்லில் காரில் மதுபோதையில் இறந்துகிடந்த ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலைசெய்ததாக, பெயின்ட்டர் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலை

நாமக்கல் நகரிலுள்ள ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். மது அருந்தும் பழக்கமுள்ள இவர், கடந்த 18-ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையிலுள்ள மதுக்கடை பாரில் நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். அதன் பிறகு, காரில் நள்ளிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி சாலை பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் காரை நிறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்திருக்கின்றனர். ஆனால், அதற்குள் கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காரில் மதுபோதையில் கழுத்தில் கத்திக் குத்தப்பட்ட நிலையில் குமரேசன் பரிதாபமாக இறந்துபோனார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து அவருடைய மனைவி துர்கா, நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில், நாமக்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்தக் கொலை தொடர்பாக, குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஏதுவாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலை
கொலை

தனிப்படையினர் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் பெயின்ட்டர் நவீன் (22) என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். இதையடுத்து கொலையாளியைத் துரிதமாகக் கைதுசெய்த தனிப்படை போலீஸாருக்கு, எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., ``கொலைசெய்யப்பட்ட குமரேசன், சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த நவீனுக்கும், குமரேசனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகராறு முற்றியதில் நவீன் கத்தியால் குத்தி குமரேசனை கொலைசெய்திருக்கிறார். மற்றபடி அவர்களுக்கிடையே வேறெந்த முன்விரோதமும் இல்லை. இந்த வழக்கில் கொலையாளியை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவியது. விரைவாக கொலைக் குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீஸாருக்கு வாழ்த்துகள்" என்றார்.