Published:Updated:

கை, கால்களை வெட்டி தண்ணீரில் நனைத்து வீசிய கொடூரம்... இளைஞர் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை!

இளைஞர் கொலை

கை, கால்களை துண்டாக்கி இளைஞரை துடிக்கத் துடிக்க கொன்ற சம்பவத்தில், இருவரைப் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது ராணிப்பேட்டை போலீஸ்.

கை, கால்களை வெட்டி தண்ணீரில் நனைத்து வீசிய கொடூரம்... இளைஞர் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை!

கை, கால்களை துண்டாக்கி இளைஞரை துடிக்கத் துடிக்க கொன்ற சம்பவத்தில், இருவரைப் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது ராணிப்பேட்டை போலீஸ்.

Published:Updated:
இளைஞர் கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகேயுள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். 22 வயதே ஆகும், இந்த இளைஞரை மிகக் கொடூரமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் வெட்டி சாய்த்திருக்கிறது. அதுவும் அவரின் ஒரு கையும், 2 கால்களும் வெட்டி துண்டாக்கப்பட்டிருக்கின்றன. விறகுக் கட்டைகளைப்போல வெட்டப்பட்ட கை, கால்கள் பிணத்தின் அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன. குடல் சரிய வயிற்றையும் வெட்டி கிழித்திருக்கிறது கொலைகார கும்பல். அதுமட்டுமின்றி, முகம் சிதையும் அளவுக்கு பலமுறை வெட்டியிருக்கிறார்கள். துடிக்கத் துடிக்க சரத்குமாரின் உயிர்ப் பறிக்கப்பட்டிருக்கிறது. அவரின் கை, கால்கள் துண்டிக்கப்படும் வரை அவர் உயிர்ப் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீதான குரோதப் பகையை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துகொள்வதற்காகத் தான் கொலையாளிகள், இப்படியான வெறியாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக விவரிக்கிறது காவல்துறை.

சரத்குமார்
சரத்குமார்

பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுதியின் சுடுகாட்டு ஓடைக்குப் பக்கத்திலிருந்து சரத்குமார் சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. துண்டிக்கப்பட்ட கை, கால்கள் மற்றும் சடலத்தில் ரத்தக்கறைப் படிந்திருக்கவில்லை. ஓடை நீரில் சிதைக்கப்பட்ட உடலையும், துண்டிக்கப்பட்ட கை, கால்களையும் நனைத்து வீசியிருக்கிறது அந்த கொடூரக் கும்பல். இளைஞரை வெட்டி வீசிய கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படியொரு கொடூரம் அந்த இளைஞர்மீது நிகழ்த்தப்படுவதற்கான காரணத்தை அறிவதற்கு முன்பு, அவரின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொலைசெய்யப்பட்ட சரத்குமார்மீது செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வழக்கொன்றில் சிக்கிய சரத்குமார் வேலூர் மத்திய சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளி வந்த அவர் தினமும் பாணாவரம் காவல் நிலையத்துக்குச் சென்று கையொப்பமிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி, அங்குள்ள தைல மரத்தோப்பில் சரத்குமாரை 5 பேர் கும்பல் வெட்டி சாய்க்க முயன்றது. அப்போது, காயத்துடன் தப்பிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து பின்னர் வீடு திரும்பியிருக்கிறார். பாணாவரத்திலுள்ள இலங்கைத் தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டியது தெரியவந்தது. பாணாவரம் போலீஸார் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து பிடிக்க முயன்றபோது, வினோத்குமார் உட்பட 2 பேர் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நிகழ்விடம்
நிகழ்விடம்

இதையடுத்து, இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் இருவர் பிடிபடாமல் தலைமறைவாக இருக்கிறார்கள். நித்யா என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், இலங்கைத் தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த வினோத்குமாருக்கு எதிராக, அதே இலங்கைத் தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த கிளிண்டன் என்பவர் சாட்சியாக மாறியிருக்கிறார். சாட்சியை நீதிமன்றத்துக்கு வரவிடாமல் தடுப்பதற்காக கிளிண்டனை, வினோத்குமார் தலைமையிலான கும்பல் கடந்த மாதம் 18-ம் தேதி வெட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த சமயம், சரத்குமார் வந்ததால் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகுதான் சரத்குமார் குறித்து விசாரித்து, அவரை 20-ம் தேதி வினோத்குமார் தலைமையிலான கும்பல் வெட்டியிருக்கிறது.

சாட்சிகளை களைப்பதற்காகவும், ஆதாரங்களை அழிப்பதற்காகவும் அடுத்தடுத்து வினோத்குமார் தரப்பு எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. இதற்கு இடையூறாக சரத்குமார் இருந்ததால், வினோத்குமார் தரப்பிலிருந்தும் பகை வளர்ந்திருக்கிறது. இதனிடையே, பாணாவரம் காமராஜர் தெருவிலிருக்கும் வாடகை வீட்டில், தனது தாய் தேவியுடன் தங்கியிருந்த சரத்குமாரை நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 பேர் கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸார் என்றுக் கூறி, வழக்கொன்றின் விசாரணைக்காக சரத்குமாரை கூட்டிசெல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நிகழ்விடத்தில் பார்வையிட்ட எஸ்.பி தீபா சத்யன்
நிகழ்விடத்தில் பார்வையிட்ட எஸ்.பி தீபா சத்யன்

ஆட்கள் வாட்டச் சாட்டமாக இருந்ததாலும், தன் மகன் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதாலும் சரத்குமாரின் தாய்க்கு அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை. அவர்களுடன் மகன் சரத்குமாரை அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் விடிந்தபோது, அவரின் மகன் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக்கிடக்கும் தகவல் தாய்க்குக் கிடைத்திருக்கிறது. அதன்பிறகே, நள்ளிரவில் அழைத்துச் சென்றவர்கள் போலீஸார் கிடையாது. கொலையாளிகள் என்று அவருக்குத் தெரியவந்திருக்கிறது. இதனிடையே, கொலைத் தொடர்பாக, 5 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். அவர்களில், 3 பேர் விசாரணைக்குப் பின்பு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து, பசுபதி மற்றும் கிளிண்டன் என்ற இருவரை மட்டும் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகிறார்கள்.

இந்த கிளிண்டனுக்காகத் தான் கடந்த மாதம் வெட்டுப்பட்டார் சரத்குமார். இதனிடையே, பெண் விவகாரத்தில் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும், போலீஸ் தரப்பிலிருந்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சரத்குமார் கொலைக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது ராணிப்பேட்டை போலீஸ்!