Published:Updated:

வாகன விபத்தில் உயிரிழந்த நண்பன்; குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்! - செஞ்சியில் சோகம்

சீனிவாசன் - பிரபு

இருசக்கர வாகனத்தில் உடன் பயணித்த நண்பன் உயிரிழந்த சோகத்தில் இருந்த இளைஞர், தனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த நண்பன்; குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்! - செஞ்சியில் சோகம்

இருசக்கர வாகனத்தில் உடன் பயணித்த நண்பன் உயிரிழந்த சோகத்தில் இருந்த இளைஞர், தனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சீனிவாசன் - பிரபு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரபு என்பவர் கொரியர் சர்வீஸில் வேலை செய்து வந்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சீனிவாசனுக்குச் சொந்தமான அந்த வாகத்தை பிரபு ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விபத்து
விபத்து

இந்நிலையில், செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், பின்னால் அமர்ந்து சென்ற சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தை இயக்கிய பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர் மீட்கப்பட்டு செஞ்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் செஞ்சி காவல்துறையினர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரபு, நண்பன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததோடு, கூர்மையான ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். செஞ்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிரபு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உரிய சிகிச்சைக்குப் பின்னர் நேற்று முன்தினமும் நள்ளிரவு வீடு திரும்பிய பிரபு, உடன் பயணித்த நண்பன் உயிரிழந்த சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டைவிட்டு வெளியே வந்தவர்... வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸார், பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடன் பயணித்த நண்பன் உயிரிழந்த சோகத்தில் இருந்த இளைஞர், தனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.