Published:Updated:

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திடீர் சாவு; தந்தை திட்டுவார் என பயந்து பூச்சு மருந்து குடித்தவர் பலி!

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

நல்லுக்குறிச்சி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திடீரென பலியானதால், தந்தை திட்டுவார் என பயந்து பூச்சிமருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திடீர் சாவு; தந்தை திட்டுவார் என பயந்து பூச்சு மருந்து குடித்தவர் பலி!

நல்லுக்குறிச்சி அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திடீரென பலியானதால், தந்தை திட்டுவார் என பயந்து பூச்சிமருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Published:Updated:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட நல்லுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய இரண்டாவது மகன் சரத்குமார்(23). இவரும், இவருடைய அண்ணன் ராஜ்குமாரும், தந்தை முனியசாமிக்கு உதவியாக கால்நடைகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் சொந்த வேலைக்காரணமாக வீரசோழனுக்கு வந்துவிட, காலை 6 மணிக்கு வீட்டுத்தொழுவத்திலிருந்த ஆடுகளை அவிழ்த்துக்கொண்டு சரத்குமார் மேய்ச்சலுக்கு புறப்பட்டிருக்கிறார். அப்போது அந்த ஊரில் நடந்த விசேஷ வீட்டில் மீதமான சாப்பாட்டை சரத்குமார் மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற ஆடுகள் தின்றதாகத் தெரிகிறது.

விருதுநகர்
விருதுநகர்

இதில் இரண்டு ஆடுகள் திடீரென சுருண்டு விழுந்து இறந்துள்ளன. இதனால் பதற்றமடைந்த அவர், செய்வதறியாது திகைத்து நின்றார். அந்த சமயம் வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ்குமார், ஆடுகள் இறந்துக்கிடப்பது குறித்து தம்பியிடம் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது, நடந்ததை அண்ணனிடம் கூறியதோடு, 'அப்பா வந்தால் என்னை திட்டுவார்' என சரத்குமார் பயந்து அழுததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைக்கேட்டு தம்பியை சமாதானப்படுத்தும் முயற்சியில், 'அப்பா வந்தால் நான் பேசிக் கொள்கிறேன், நீ தைரியமாக இரு' என சரத்குமாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறிய சரத்குமார், மலைராஜ் என்பவரின் தோட்டத்திற்குச் சென்று தந்தையை நினைத்து பயந்து பூச்சு மருந்து குடித்ததாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து இரவு 7:40 மணிக்கு வீட்டுக்கு போன் செய்த அவர், தந்தைக்கு பயந்து தான் பூச்சு மருந்து குடித்துவிட்டதாக தகவல் சொல்லியுள்ளார். இதனால் பதறிப்போன முனியசாமியும், ராஜ்குமாரும் டூவீலரில் மலைராஜின் தோட்டத்திற்குச் சென்று அங்கு மயக்கநிலையில் கிடந்த சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 விஷம்
விஷம்
சித்தரிப்புப் படம்

பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமக்குடிக்கும், பின் அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரத்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் வீரசோழன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism