Published:Updated:

முகநூல் காதல்? இதய நோயால் உயிரிழந்த இளம்பெண்... சோகத்தில் விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு?

மரணம்

முகநூல் காதலி உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் தவித்துவந்த இவர், கடந்த 2-ம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

முகநூல் காதல்? இதய நோயால் உயிரிழந்த இளம்பெண்... சோகத்தில் விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு?

முகநூல் காதலி உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் தவித்துவந்த இவர், கடந்த 2-ம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரின் மூத்த மகன், 26 வயதான மணிகண்டன். புகைப்படக் கலைஞரான இவர், சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது இவருக்கு முகநூல் மூலமாக 'மலர்' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை என்று கூறப்படும் போதிலும், பிரியமாக நேசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனக்கு இதயக் கோளாறு இருப்பதாக மணிகண்டனிடம் மலர் கூறியதாகத் தெரிகிறது. இருந்தபோதும் நேசம் குறையாமல் முகநூல் மூலமாகவே காதல் செய்துவந்துள்ளார் மணிகண்டன்.

காதல்
காதல்
சித்தரிப்புப் படம்

இந்தச் சூழலில், கடந்த மாதம் 26-ம் தேதி மலர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த விவரம் தெரியாமல், மணிகண்டன் வழக்கம்போல் மலரைத் தொடர்புகொள்ள முயன்றுவந்துள்ளார். பின்னர், மலர் உயிரிழந்த செய்தி அவருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார் மணிகண்டன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முகநூல் காதலி உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் தவித்துவந்த இவர், கடந்த 2-ம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட குடும்பத்தினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார் மணிகண்டன்.

தற்கொலை
தற்கொலை

இது தொடர்பாக மணிகண்டனின் தந்தை அளித்த புகாரின் பேரில், 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் காவல்துறையினர்.