Published:Updated:

கஞ்சா, கத்தியோடு போலீஸில் சிக்கிய இளைஞர்... திடீர் மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை

உயிரிழந்த இளைஞர் விக்னேஷ்

வாகனச் சோதனையில் கஞ்சா, கத்தியோடு சிக்கிய இளைஞர் விக்னேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

கஞ்சா, கத்தியோடு போலீஸில் சிக்கிய இளைஞர்... திடீர் மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை

வாகனச் சோதனையில் கஞ்சா, கத்தியோடு சிக்கிய இளைஞர் விக்னேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

Published:Updated:
உயிரிழந்த இளைஞர் விக்னேஷ்

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், தலைமைக் காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. சந்தேகத்தின்பேரில் ஆட்டோவை வழிமறித்த போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா (25) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.

மரணம்
மரணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் விக்னேஷ் என்பவரிடம் 5 கிராம் கஞ்சா பொட்டலம் இரண்டும், அவனின் இடுப்பில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியும் இருந்தது. இதையடுத்து ரமேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீஸார் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்ததால் இணை கமிஷனர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ரமேஷ், பெயின்டராக வேலைப்பார்த்து வருகிறார். உயிரிழந்த விக்னேஷ், மெரினாவில் குதிரை ஓட்டும் வேலையைச் செய்துவந்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism