Published:Updated:

துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை... காரில் எடுத்துச் செல்லப்பட்ட உடல் - ஓட்டுநர் கைது!

கொலைசெய்த டிரைவர் நாகராஜ்

அன்பாகப் பேசுவதுபோல் நடித்து அகல்யாவைக் கொலை செய்தவர், உடலை காரில்வைத்தே பல கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று வடசேரி வாய்க்காலில் போட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை... காரில் எடுத்துச் செல்லப்பட்ட உடல் - ஓட்டுநர் கைது!

அன்பாகப் பேசுவதுபோல் நடித்து அகல்யாவைக் கொலை செய்தவர், உடலை காரில்வைத்தே பல கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று வடசேரி வாய்க்காலில் போட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கொலைசெய்த டிரைவர் நாகராஜ்

தஞ்சாவூரில், தனியார் பஸ் டிரைவரான இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண் ஒருவரிடம் பழகியிருக்கிறார். இருவரும் காதலித்த நிலையில், ஏற்கெனவே டிரைவருக்குத் திருமணம் ஆனது இளம்பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் தன்னையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளம்பெண்ணை அந்த டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து உடலை வாய்க்காலில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இளம்பெண்ணைக் கொலைசெய்த நாகராஜ்
இளம்பெண்ணைக் கொலைசெய்த நாகராஜ்

தஞ்சாவூர் மாவட்டம், மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா (26). கல்லுாரிப் படிப்பை முடித்திருக்கும் அவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக தஞ்சாவூரிலுள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படித்துவந்திருக்கிறார். அதற்காக தினமும், மேலஉளூரிலிருந்து தனியார் பஸ் மூலம் தஞ்சாவூருக்குச் சென்று வநதிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நூலகத்துக்குச் சென்ற அகல்யா வீடு திரும்பவில்லை. பயந்துபோன அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகல்யாவைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதைப் பார்த்தவர்கள் தஞ்சாவூர் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

கொலை
கொலை

உடனே, உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில் வாய்க்காலில் கிடந்தது காணாமல்போன அகல்யா என்பது தெரியவந்தது. அகல்யா எப்படி இறந்தார், அவர் உடல் அந்தப் பகுதிக்கு எப்படி வந்தது என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதற்காக அகல்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில், தஞ்சாவூர் ஞானம் நகரைச் சேர்ந்த நாகராஜ் (25) என்ற இளைஞர் அகல்யாவிடம் கடைசியாகப் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சந்தேகத்தின் பேரில் நாகராஜைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் `திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அகல்யாவைக் கொலை செய்துவிட்டேன்’ எனக் கூறி போலீஸாரை அதிரவைத்த நாகராஜைக் கைதுசெய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``நாகராஜ், தஞ்சாவூர்– பட்டுக்கோட்டை மார்க்கத்தில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்துவந்திருக்கிறார்.

அகல்யா, மேலஉளூரிலிருந்து தினமும் தஞ்சாவூருக்கு நாகராஜ் ஓட்டி வந்த பஸ்ஸில் சென்றிருக்கிறார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிவந்த இருவரும் வெளியிடங்களுக்கும் சென்றுவந்துள்ளனர்.

நாகராஜ் தனக்குத் திருமணமானதை மறைத்து அகல்யாவிடம் பழகிவந்திருக்கிறார். ஒரு கட்டத்துக்குப் பிறகு நாகராஜ் திருமணமானவர் என்பது அகல்யாவுக்குத் தெரியவர அதிர்ச்சியடைந்திருக்கிறார். உயிருக்கு உயிராகக் காதலித்த அகல்யா, நாகராஜிடம் தன்னையும் திருமணம் செய்துகொள் எனக் கூறிவந்திருக்கிறார்.

விளையாட்டாகச் சொல்கிறார், சமாளித்துவிடலாம் என நினைத்திருக்கிறார் நாகராஜ். ஆனால் திரும்பத் திரும்ப திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அகல்யா, நாகராஜிடம் வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை தீர்வதற்கு அகல்யாவைத் தீர்த்துக்கட்டுவது மட்டுமே ஒரே வழி என யோசித்த நாகராஜ் கொலை செய்வதற்காகத் திட்டம் போட்டிருக்கிறார்.

கொலைசெய்த டிரைவர் நாகராஜ்
கொலைசெய்த டிரைவர் நாகராஜ்

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி அகல்யாவை காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலையில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிக்குச் சென்று காரை நிறுத்தியிருக்கிறார். அன்பாகப் பேசுவதுபோல் நடித்து, அகல்யா போட்டிருந்த துப்பட்டாவைப் பிடித்து இறுக்கி, கழுத்தை நெறித்துக் கொலைசெய்திருக்கிறார். மூச்சு அடங்கியதும், அகல்யாவின் உடலை காரில்வைத்தே பல கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்றவர், வடசேரி வாய்க்காலில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். நாகராஜிடம் மேலும் விசாரணை தொடர்ந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.