Published:Updated:

நெல்லை: தொடரும் கொலைகள்... பதறும் மக்கள்! - தொழிலாளி கொலையின் பின்னணி என்ன?

கொலைசெய்யப்பட்ட நம்பிராஜன்

நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிராம மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

நெல்லை: தொடரும் கொலைகள்... பதறும் மக்கள்! - தொழிலாளி கொலையின் பின்னணி என்ன?

நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிராம மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட நம்பிராஜன்

நெல்லை மாவட்டம், நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பிராஜன். பேட்டைப் பகுதியிலுள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்திருக்கிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அவரை இரு பைக்குகளில் வந்த நான்கு பேர்கொண்ட கும்பல் வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பிவிட்டது. கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

கொலை நடந்த இடத்தில்
கொலை நடந்த இடத்தில்

நம்பிராஜனுக்குக் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. அவர் மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதால் நடுக்கல்லூர் கிராம மக்களும் உறவினர்களும் கொந்தளிப்படைந்தனர். அதனால் நெல்லை-சேரன்மகாதேவி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். நம்பிராஜன் வேலை முடிந்து வரும்போது அவரைப் பின்தொடர்ந்து வந்து கொலைசெய்த நால்வர் குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதற்கிடையே கொலை நடந்த இடத்தில் போலீஸார் சோதனையிட்டபோது ஒரு செல்போன் கிடைத்திருக்கிறது. அது கொலையாளியின் செல்போனாக இருக்கலாம் என்பதால் போலீஸார் அதைப் பரிசோதித்துவருகிறார்கள்.

சாலைமறியல்
சாலைமறியல்

கொலை நடந்த இடத்தின் அருகேயுள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகிறார்கள். இதற்கிடையே, கிருஷ்ண ஜயந்தி விழாவின்போது நம்பிராஜனுக்கும் வேறு சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு கும்பல் வாகனங்களை அடித்து நொறுக்கியதால் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட பகை உணர்ச்சியால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தில் கோயில் விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்டனர். அதே சமூகத்தைச் சேர்ந்த நம்பிராஜன் இப்போது கொலையாகியிருப்பதால் அவர் சார்ந்த சமூகத்தினர் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.

மறியல் போராட்டம்
மறியல் போராட்டம்

எனவே, அசம்பாவிதம் நடப்பதைத் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி-யான அஸ்ரா கார்க் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்புப்ப ணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். கொலையானவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடக்கூடும் எனத் தகவல் வந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.