Published:Updated:

`என்னை மாதிரி யாரும் ஏமாறாதீங்க...' - ஆன்லைன் விளையாட்டு குறித்து ஸ்டேட்டஸ்; இளைஞர் தற்கொலை

தான்தோன்றிமலை

கரூரில் ஆன்லைன் விளையாட்டில், பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், மனஉளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`என்னை மாதிரி யாரும் ஏமாறாதீங்க...' - ஆன்லைன் விளையாட்டு குறித்து ஸ்டேட்டஸ்; இளைஞர் தற்கொலை

கரூரில் ஆன்லைன் விளையாட்டில், பணத்தை இழந்த இளைஞர் ஒருவர், மனஉளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தான்தோன்றிமலை

நவீன வகை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் ஆன்லைன் பப்ஜி கேம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு, ப்ரீஃபயர் கேம் உள்ளிட்ட விளையாட்டுகள் சமீபகாலமாகப் பிரபலமாகிவருகின்றன. இன்றைய இளைஞர்கள் பலர், அந்த ஆன்லைன் கேம்களை எந்நேரமும் விளையாடிவருகின்றனர். இதனால், அவர்களில் பலர் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகிவருகின்றனர். இந்த நிலையில், அத்தகைய ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர், தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட சஞ்சய்
தற்கொலை செய்துகொண்ட சஞ்சய்

கரூர் அருகே உள்ள தான்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் தனது தாயுடன் வசித்துவந்த சஞ்சய் (வயது 23) என்ற இளைஞர், நேற்று மாலை தாயின் புடவையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைச் சம்பவம் குறித்து தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸாரின் தொடர் விசாரணையில் உயிரிழந்த சஞ்சயின் செல்போனைப் கைப்பற்றிப் பார்த்தபோது, பல தகவல்கள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், 'கேமுக்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க. என்னை மாதிரி ஏமாறாதீங்க. எதாவது சாதிங்க' எனவும், 'பிரீ ஃபயர் விளையாட்டில், முகம் தெரியாதவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளேன். இந்தச் செயலியைத் தடைசெய்தால்தான் என்னைப் போன்று யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்' எனவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

சஞ்சய் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
சஞ்சய் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

"ஆன்லைன் விளையாட்டு மோசடிகள் மற்றும் மன அழுத்தத்தால் பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் இப்படி உயிரை மாய்த்துக்கொள்வது வேதனை. இதைத் தடுக்க, அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவர்களை அடிக்கடிக் கண்காணிக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism