Published:Updated:

பெரம்பலூர்: ஒருதலைக் காதல்... எச்சரித்த பள்ளி மாணவியின் தந்தைமீது நாட்டு வெடி வீச முயன்ற இளைஞர்!

பெரம்பலூர்

மாணவி பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வரும் வழியில் தவறான வார்த்தைகளால் பேசியதோடு, அவரின் குடும்பத்தினர் குறித்தும் தவறாகப் பேசியிருக்கிறார்.

பெரம்பலூர்: ஒருதலைக் காதல்... எச்சரித்த பள்ளி மாணவியின் தந்தைமீது நாட்டு வெடி வீச முயன்ற இளைஞர்!

மாணவி பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வரும் வழியில் தவறான வார்த்தைகளால் பேசியதோடு, அவரின் குடும்பத்தினர் குறித்தும் தவறாகப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
பெரம்பலூர்

``நீ பாட்டுக்கு என் பொண்ணு பின்னாடி தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தா, எங்க குடும்பத்தைப் பத்தி என்னப்பா பேசுவாங்க" எனப் பெண்ணைப் பெற்றவர் காதலித்தவரிடம் பேச, ஆவேசமடைந்த அந்த இளைஞர் நாட்டு வெடியை வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். டூ வீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துவருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்கிற பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்துவந்திருக்கிறார். இந்நிலையில், அந்த மாணவி பள்ளி முடித்துவிட்டு வரும் வழியில் இளைஞர்களை அருகில் வைத்துக்கொண்டு கேலி, கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனபால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரேவதியின் பெற்றோர் இது தொடர்பாக தனபாலின் குடும்பத்தாரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் தனபாலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

தனபால்
தனபால்

அந்தக் கோபத்தில் இருந்தவர் மீண்டும் ரேவதி பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வரும் வழியில் தவறான வார்த்தைகளால் பேசியதோடு, அவரின் குடும்பத்தினர் குறித்தும் தவறாகப் பேசியிருக்கிறார். இதை ரேவதி தன் தந்தையிடம் சொல்லி அழுதிருக்கிறார். ஆத்திரமடைந்த ரேவதியின் தந்தை, தனபாலைக் குச்சியால் அடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை மனதில் வைத்துக்கொண்டு ரேவதியின் வீட்டுக்கு அருகே தனபால் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்திருக்கிறார். இதில் கடுப்பான ரேவதியின் தந்தை, பெரியப்பா இருவரும் தனபாலைத் தடுத்து நிறுத்தி,

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

"ஏப்பா உனக்கே நல்லா இருக்கா... நீ பாட்டுக்கு என் பொண்ணு பின்னாடி தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தா எங்க குடும்பத்தைப் பத்தி என்னப்பா\, பேசுவாங்க" என்று பேசியபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டைத் தூக்கி வீச முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தனபாலைத் தடுத்து நிறுத்தியதோடு, போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தனபாலைக் கைதுசெய்து, அவரிடமிருந்து நாட்டு வெடிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism