Published:Updated:

ஈரோடு: ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை... இரண்டாவது முறையாக போக்சோவில் கைதான இளைஞர்

போக்சோ

தீபக்குமார்தான் சிறுமியின் குழந்தைக்குத் தந்தை எனத் தெரியவந்தது. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தீபக்குமாரை, 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு, ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சில மாதங்களுக்கு முன்பு  பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தீபக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து, அவரைச் சிறையில் அடைத்தனர் போலீஸார்.

போக்சோ கைது
போக்சோ கைது
representational image

இதற்கிடையே, அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் மீண்டும் அந்தச் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் கடந்த மாதம் அந்தச் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இது குறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபக்குமார்தான் சிறுமியின் குழந்தைக்குத் தந்தை எனத் தெரியவந்தது. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தீபக்குமாரை, 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.