விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 26-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டுடிருந்திருக்கிறார். அன்று மாலை சுமார் 3 மணி அளவில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (31) என்ற இளைஞர், அந்தச் சிறுமிக்குப் பாலியல்ரீதியான தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ந்த குழந்தையின் பெற்றோர், 27-ம் தேதி மாலை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட மகளிர் காவல்துறையினர், குழந்தையிடம் பாலியல்ரீதியில் தொந்தரவு அளித்த மோகன்ராஜை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் திருவெண்ணைநல்லூர் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.