Published:Updated:

போக்சோ: டியூஷனுக்கு வந்த 9 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! - இளைஞருக்குச் சிறை

போக்சோ சட்டம்
News
போக்சோ சட்டம்

``நான் உதவி பண்ணுறேன்" எனக் கூறிய 21 வயது இளைஞரால், டியூஷனுக்கு வந்திருந்த 9 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தவண்ணம் இருப்பது வருத்தத்துக்குரிய ஒன்று. இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவருவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியான ஓர் அத்துமீறல் சம்பவம்தான் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள சோதனைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (எ) மணிவண்ணன் (21). இவரும், இவருடைய தந்தையும் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்துவந்துள்ளனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மணிவண்ணனுடைய தங்கை, அதே பகுதியைச் சேர்ந்த சில பள்ளி மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துவருகிறார். கடந்த 22.12.2021 அன்று வழக்கம்போல, பள்ளி மாணவிகள் டியூஷனுக்கு வந்துள்ளனர். அச்சமயம், மணிவண்ணனின் தங்கை அருகிலுள்ள கடைக்கு சென்றிருக்கிறார். வீட்டில், மணிவண்ணனும் அவரின் பாட்டியும் மட்டுமே இருந்துள்ளனர். `தன்னுடைய தங்கை வரும் வரை நான் உங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன்' எனப் பள்ளி மாணவிகளிடம் மணிவண்ணன் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அப்போது வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த நோட்டை எடுப்பதற்கு, 4-ம் வகுப்பு பயிலும் 9 வயதுடைய பள்ளி மாணவி சென்றபோது, அவருடன் மணிவண்ணனும் சென்றிருக்கிறார். உயரத்தில் இருந்த நோட்டை எடுப்பதற்கு உதவி செய்வதாகக் கூறி, அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த நபர்.

நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்
நீதிமன்ற வளாகம் - விழுப்புரம்

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தனக்கு நடந்த துன்புறுத்தலைப் பற்றி தன் தாயிடம் தெரிவித்திருக்கிறார். குழந்தை கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர்கள், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமரசமாகச் செல்லலாம் என்றும், நஷ்டஈடு தருகிறோம் என்றும் சிலர் சிறுமியின் தந்தையைத் தொடர்புகொண்டு பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று (23.12.2021) காலை மணிவண்ணனைக் கைதுசெய்துள்ளனர் மகளிர் காவல்துறையினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் மகளிர் காவல்துறையினரிடம் பேசியபோது, ``சிறுமி தரப்பினரின் புகாரைத் தொடர்ந்து இரண்டு போக்சோ வழக்குகளை மணிவண்ணன் மீது பதிவு செய்தோம். நேற்று மாலை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, செஞ்சி துணைச் சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.