Published:Updated:

பள்ளி மாணவியைக் கழுத்தறுத்துக் கொல்ல முயன்ற இளைஞர்! - ஜாமீனில் வெளியே வந்து வெறிச்செயல்

ஈரோடு

ஜாமீனில் நவீன் வெளியே வந்த நவீன், பள்ளி மாணவியைப் பின்தொடர்ந்து சென்று அவரைக் கொல்ல முயன்றார்.

பள்ளி மாணவியைக் கழுத்தறுத்துக் கொல்ல முயன்ற இளைஞர்! - ஜாமீனில் வெளியே வந்து வெறிச்செயல்

ஜாமீனில் நவீன் வெளியே வந்த நவீன், பள்ளி மாணவியைப் பின்தொடர்ந்து சென்று அவரைக் கொல்ல முயன்றார்.

Published:Updated:
ஈரோடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அரசுப் பள்ளியொன்றில் படித்துவரும் 16 வயது மாணவியை, இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த மான் என்கிற நவீன் (18) என்பவர் காதலிப்பதாகக் கூறி அவர் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார். அவரது காதலை ஏற்க மறுத்தபோதிலும் தொடர்ந்து மாணவியைப் பின்தொடர்வது போன்ற செயலில் ஈடுபட்டுவந்தார். அவரின் டார்ச்சரைத் தாங்க முடியாத மாணவி, தன் தாயாரிடம் கூறினார். இதையடுத்து போலீஸில் மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் நவீன் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நவீன்
நவீன்

பின்னர் ஜாமீனில் நவீன் வெளியே வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து தனது வீட்டுக்கு அந்த மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த நவீன், மாணவியை வழிமறித்து அவர் கழுத்தை பிளேடால் அறுத்து அவரைக் கொலைசெய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டு அவரைப் பிடிப்பதற்காக ஓடிவந்தனர். இதனால் நவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த பள்ளி மாணவியை மீீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் இன்று நவீனைக் கைதுசெய்தனர். என்ன காரணத்துக்காக நவீன், மாணவியைக் கொலைசெய்ய முயன்றார் என்பது குறித்து பவானிசாகர் போலீஸார் விளக்கம் கூற மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி சசிமோகன், கைதான இளைஞரை குண்டாஸில் அடைக்க பரிந்துரை செய்திருப்பதாக நம்மிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.