Published:Updated:

சென்னை: விலையுயர்ந்த பைக்குகள் டார்கெட்... சுலபமாகத் திருடும் இளைஞன் சிக்கியது எப்படி?

பைக் திருட்டில் கைதான லோகேஷ்

நள்ளிரவு நேரத்தில் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் விலையுயர்ந்த பைக்குகளைக் குறிவைத்துத் திருடிவந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

சென்னை: விலையுயர்ந்த பைக்குகள் டார்கெட்... சுலபமாகத் திருடும் இளைஞன் சிக்கியது எப்படி?

நள்ளிரவு நேரத்தில் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் விலையுயர்ந்த பைக்குகளைக் குறிவைத்துத் திருடிவந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
பைக் திருட்டில் கைதான லோகேஷ்

சென்னை திருவல்லிக்கேணி, சாமி தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் கடந்த 16-ம் தேதி இரவு வீட்டின் வாசலின் தன்னுடைய விலையுயர்ந்த பைக்கை நிறுத்திவைத்திருந்தார். மறுநாள் பைக்கை எடுக்க வந்த சரத்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் நிறுத்தியிருந்த இடத்தில் பைக்கைக் காணவில்லை. சரத்குமார், பைக்கைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சரத்குமார் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

அப்போது பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது பைக்கைத் திருடியது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற தமிழர் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து லோகேஷை போலீஸார் கைதுசெய்து அவரிடம் விசாரித்தபோது அவர் பைக்கைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், ஐஸ் ஹவுஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளைத் திருடிவந்தது தெரியவந்தது. அதனால் அவரிடமிருந்து மூன்று விலையுயர்ந்த பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான லோகேஷ் நள்ளிரவு நேரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விலையுயர்ந்த பைக்குளை முதலில் நோட்டமிடுவான். பின்னர் அந்த பைக்குகளைத் திருடி ஓரிடத்தில் மறைத்துவைப்பான். அதை விற்பதற்கு முன்பு எங்களிடம் சிக்கிக்கொண்டான். விலையுயர்ந்த பைக்குகளின் லாக்குகளை லோகேஷ் எளிதாகத் திறப்பதில் கில்லாடியாக இருந்துவந்திருக்கிறான். தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.