Published:Updated:

சென்னை: போதைக்காகப் பயன்படுத்தப்படும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் - சிக்கிய இளைஞர்!

மாத்திரைகள்

சென்னையில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்க முயன்றவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: போதைக்காகப் பயன்படுத்தப்படும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் - சிக்கிய இளைஞர்!

சென்னையில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்க முயன்றவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
மாத்திரைகள்

சென்னை, அடையாறு தேஷ்முக் சாலை, சிவாஜி மண்டபம் அருகில் அபிராமபுரம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்தபோது அதில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் அதிக அளவில் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது போதைக்காக இந்த உடல்வலி மாத்திரைகளைச் சிலர் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்வதாகவும் அந்த நபர் கூறினார்.

மதன்
மதன்

இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கோகுல் என்கிற மதன் (23) என்றும், ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், மதன் மீது ஏற்கெனவே ஒரு கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்கு என மூன்று வழக்குகள் உள்ளன. விசாரணைக்குப் பிறகு மதனை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 1,500 உடல்வலி நிவாரண மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட மதனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.