Published:Updated:

சென்னை: பணம் கேட்டு மிரட்டல்... வாக்கிங் சென்றவருக்குக் கத்திக்குத்து!

கத்திக்குத்து

சென்னையில் வாக்கிங் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: பணம் கேட்டு மிரட்டல்... வாக்கிங் சென்றவருக்குக் கத்திக்குத்து!

சென்னையில் வாக்கிங் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கத்திக்குத்து

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி அண்ணா சாலையில் வசித்துவருபவர் ராஜசாலமன் (32). இவர் 8-ம் தேதி அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகில் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஒரு நபர், ராஜசாலமனிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். பணத்தை ராஜசாலமன் கொடுக்க மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், கத்தியால் ராஜசாலமனைக் குத்தியிருக்கிறார். வலியால் ராஜசாலமன் சத்தம் போட்டதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மர்ம நபரை மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

கைது
கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் முகமது நதிமுல்லா (23) என்றும், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைதுசெய்து கத்தி, பைக்கைப் பறிமுதல் செய்தனர். கைதான நதிமுல்லா மீது ஏற்கெனவே ஒரு வழிப்பறி வழக்கு நிலுவையில் இருக்கிறது. விசாரணைக்குப் பிறகு நதிமுல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.