Published:Updated:

சென்னை: சிறுமியைக் காணவில்லை புகார்... தாலிகட்டிய இளைஞர் போக்சோவில் கைது! - நடந்தது என்ன?

சிறுமி
News
சிறுமி

சென்னையில் 17 வயது சிறுமிக்குத் தாலிக்கட்டிய இளைஞன் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டான்.

சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் பெற்றோருடன் 17 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இவரை 3.1.2021-ம் தேதி முதல் காணவில்லை என அண்ணாசாலை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியைக் காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (18) என்ற இளைஞர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

போக்சோ
போக்சோ

இதையடுத்து போலீஸார் விக்னேஷைத் தேடிவந்தனர். அப்போது அவரும் சிறுமியும் தலைமறைவாக இருந்த இடம் குறித்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறிய விக்னேஷ் அவரை பெசன்ட் நகருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ள ஒரு கோயிலில் சிறுமிக்கு தாலி கட்டியிருக்கிறார். பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து இந்த வழக்கை அண்ணாசாலை போலீஸார், திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். சிறுமியையும் விக்னேஷையும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரிடமும் தனித்தனியாக அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தனர். பின்னர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஷைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு விக்னேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமிக்கும் விக்னேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் சிறுமியைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட விக்னேஷ், அவரை பெசன்ட் நகருக்கு அழைத்துச் சென்று தாலி கட்டியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் சிறுமியைக் காணவில்லை என அவரின் பெற்றோர் புகார் கொடுத்தனர். செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது விக்னேஷ், சிறுமி ஆகியோர் தலைமறைவாக இருந்த இடம் எங்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று இருவரையும் பிடித்துவிட்டோம். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதோடு தேவையான கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்