Published:Updated:

சென்னை: மாயமான சிறுமி; பூட்டிய வீட்டில் பாலியல் தொல்லை! - சிசிடிவி உதவியால் கண்டறிந்த போலீஸ்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னையில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். சிசிடிவி உதவியால் சிறுமியை போலீஸார் மீட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர், தன்னுடைய 13 வயது மகளைக் கடந்த 3.8.2021-ம் தேதி கடைக்கு அனுப்பினார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியின் அம்மா, மகளைப் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அதனால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கும் சிறுமியின் அம்மா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சிறுமி கடைக்குச் சென்ற வழியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (29) என்பவர் சிறுமியிடம் பேசுவது தெரியவந்தது. பின்னர் அவர் சிறுமியை அழைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.

உடனே போலீஸார் குமரேசன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள் யாரோ இருப்பது தெரியவந்தது. அதனால் சந்தேகத்தின்பேரில் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் சிறுமி இருப்பதைப் பார்த்த போலீஸார் அவளை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational
சென்னை: மகள்களுக்கு பாலியல் தொல்லை! - காவலர் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரும் மனைவி

சிறுமியிடம் விசாரித்தபோது குமரேசன் என்பவர் அன்பாகப் பேசி வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். இதையடுத்து சிறுமியின் அம்மா அளித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீஸார், குமரேசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு