Published:Updated:

`பேசுவதை தவிர்த்தாள்; பழிவாங்கவே அப்படிச் செய்தேன்!' - சூலூரில் காதலியைப் பதறவைத்த காதலன்

`தன்னிடம் பேசுவதை தவிர்த்த காதலியைப் பழிவாங்க அவரின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன்' என்று காதலன் போலீஸிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

காதலன்
காதலன்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவர், திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அஜித்குமார், சூலூருக்குச் சென்ற சமயத்தில் தன்னுடைய ஊரைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணைச் சந்தித்துள்ளார். ஒரே ஊர் என்பதால் இருவரும் பேசியுள்ளனர். அப்போது, இருவரும் செல்போன் நம்பரைப் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நட்பு, காதலாக மலர்ந்துள்ளது.

`கழிவறையில் ஸ்பை கேமரா; ஹார்டுடிஸ்க்கில் ஆபாச வீடியோ!' - ஐ.டி.ரெய்டில் சிக்கிய சென்னை கணக்காளர்

அந்தப் பெண், சூலூரில் தங்கி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கல்லூரி மாணவி, சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், `என்னை நம்ப வைத்து அஜித்குமார் ஏமாற்றிவிட்டார். அதோடு என்னுடைய சில தவறான வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்' என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி அஜித்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்து வீடியோக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அஜித்குமார் போலீஸாரிடம் கூறுகையில், `நான் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஓராண்டுக்கு முன் என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த மாணவியைச் சந்தித்தேன். அதன்பிறகு இருவரும் காதலித்தோம். தற்போது அவர், சேவூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரும் வாட்ஸ்அப் காலில் பேசி வந்தோம். அப்போது மாணவியின் சில வீடியோக்களைச் சேமித்து என்னுடைய செல்போன் மற்றும் லேப்-டாப்பில் வைத்திருந்தேன்.

ஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு! - தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண்

இதையடுத்து காதலியிடம் வேறு சில வீடியோக்களை செல்போனில் எடுத்து அனுப்புமாறு கூறினேன். அவளும் எனக்கு அனுப்பி வைத்தாள். இந்நிலையில், திடீரென எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை அவள் தவிர்த்தாள். அவளுக்கு பல தடவை போன் செய்தும் போனை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில் என் நம்பரை செல்போனில் பிளாக் செய்துவிட்டாள். இதனால் அவளுடன் என்னால் பேச முடியவில்லை. நேரில் சென்றபோதுகூட என்னுடன் பேசாமல் சென்றுவிட்டாள்.

இதனால் அவள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளைப் பழிவாங்கத் திட்டமிட்டேன். அதனால்தான், அவளின் வீடியோக்களை என் முகநூலில் பதிவு செய்தேன். மேலும் அவளுடைய உறவினர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அந்த வீடியோக்களை அனுப்பி வைத்தேன்.

Vikatan

இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. என்னைப் பற்றித் தவறாகப் பேசினாள். இதையடுத்து, அவள் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாகக் கூறினாள். `புகார் கொடுத்தால், உன் முகத்தில் ஆசிட் வீசுவேன்' என்று கூறினேன். இதையடுத்து என் மீது போலீஸில் புகார் கொடுத்துவிட்டாள்' எனக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவி கொடுத்த புகாரின்பேரில், அஜித்குமார் மீது போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசும் போலீஸார், `` பெண்ணின் வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்ட குற்றத்துக்காக அஜித்குமாரைக் கைது செய்துள்ளோம். அந்தப் பெண்ணின் வீடியோ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் " என்கின்றனர்.