Published:Updated:

`காதலைத் துண்டித்த காதலி!' - பெண்ணின் சகோதரிக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை இளைஞர் #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

காதலியால் ஒதுக்கப்பட்ட இளைஞர் ஒருவர், பழிக்குப் பழியாக காதலியின் தங்கைக்கு ஆபாசப் படம் அனுப்பி சிக்கியுள்ளார். #TamilnaduCrimeDiary

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும், அதே பகுதியில் வசித்தும் வரும் இளம்பெண் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தப் பெண், அவரோடு கொண்டிருந்த காதலைத் துண்டித்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரூபன் காதலிக்கும்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவதாகக் கூறி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!
ரூபன்
ரூபன்

இதை அந்தப் பெண் பொருட்படுத்தாததால், அப்பெண்ணின் தங்கைக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களில், ஆபாசமாகத் தகவல் அனுப்பி, இளம்பெண்ணின் சகோதரிக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இளம்பெண்ணின் பெற்றோர், சிங்காநல்லூர் போலீஸில் புகாரளித்தனர். இதன் தொடர்ச்சியாகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட இரண்டு பிரிவுகளின்கீழ் ரூபனைக் கைது செய்த சிங்காநல்லூர் போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கடந்தாண்டு சி.பி.ஐ குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால், மேல் நடவடிக்கை இல்லை என்று கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது. இந்தநிலையில், குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுவதையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

இதற்காக சேலம் மத்திய சிறையிலிருந்து ஐந்து பேரும் இன்று கோவை அழைத்து வரப்பட்டனர். கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழைத்து வராமல் இருந்த நிலையில், முதன்முறையாக நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முக்கியமாக, இந்த வழக்கு பாலியல் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டது என்பதாலும், அதிகபட்ச தண்டனை வழங்க முடியாது என்பதாலும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து, மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐந்து பேரின் நீதிமன்றக் காவலையும் வருகிற பிப்ரவரி 11-ம் தேதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின் செல்ல