சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அவர், தன்னுடைய பெயரை கோகுல்ராஜ் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரும் நட்பாக முதலில் பழகியிருக்கின்றனர். பின்னர் கோகுல்ராஜ் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். அதன் பிறகு கோகுல்ராஜும் சிறுமியும் நேரில் சந்தித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல்ராஜ் வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்று ஆசைவார்த்தைகளைக் கூறி, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமிக்கு கோகுல்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தபோது அதற்கு சிறுமி மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், நாம் இருவரும் சந்தோஷமாக இருந்தபோது எடுத்த வீடியோவை உன்னுடைய பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் பயந்துபோன சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளையும், கோகுல்ராஜ் குறித்த தகவலையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் கோகுல்ராஜிடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிறுமியிடமும் போலீஸார் விசாரித்து அவரின் வாக்குமூலத்தையும் பெற்றனர்.

அதன்அடிப்படையில் கோகுல்ராஜை போலீஸார் கைதுசெய்தனர். இவர் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர். கோகுல்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை, கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது.