Published:Updated:

`முகம் சிதைப்பு.. அழுகிய நிலையில் சடலம்!’- நாயால் வெளிச்சத்துக்கு வந்த கொலைச் சம்பவம்

கை
கை ( எம். விஜயகுமார் )

`இறந்தவர் யார்... அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.'

சேலம் செட்டிச்சாவடி செல்லும் வழியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் தலை மற்றும் கை வெட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் கிடைத்துள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேடல்
தேடல்
எம். விஜயகுமார்

சேலத்திலிருந்து செட்டிச்சாவடி செல்லும் பிரதான சாலையில் பசுவக்கல் பகுதியில் நேற்று மதியம் நாய் ஒன்று மனிதனின் கையைக் கவ்வியவாறு சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், நாயைத் துரத்தியதில் கையைச் சாலையிலேயே போட்டுவிட்டுச் சென்றது. அழுகிய நிலையில் இருந்த கையைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, அந்தப் பகுதியில் தேடிப் பார்த்தபோது முட்புதருக்கு இடையே உள்ள குழியில் தலையில்லாத நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் இருப்பது தெரிய வந்தது.

உடனே அழகாபுரம் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வாலிபரின் தலையைத் தேட ஆரம்பித்தனர். அப்போது அருகே உள்ள காட்டுப் பகுதியில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் தலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி மக்களை அழைத்து இறந்தவரின் அடையாளம் குறித்து காவல்துறையினர் கேட்டனர். ஆனால், இறந்தவர் யார் என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை.

விசாரணை
விசாரணை
எம். விஜயகுமார்

இதுபற்றி காவல்துறையில் விசாரித்தபோது, ``இறந்த வாலிபரைப் பற்றி முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை. வாலிபரை வேறு ஒரு இடத்தில் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு இந்தப் பகுதிக்கு வந்து உடலையும் தலையும் வீசிச் சென்று இருக்கலாம். மேலும், இறந்தவர் யார்? அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

வாலிபரின் உடல் இருந்த பகுதிக்கு சற்று அருகில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு உள்ளவர்கள் குறித்தும் சேலம் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு