Published:Updated:

காதலியைச் சந்திக்க குடோனில் குண்டு வீசிய கொத்தனார்! - அய்யம்பாளையத்தை அதிரவைத்த இளைஞர்

ராஜாங்கம்
ராஜாங்கம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர், மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அய்யம்பாளையம்-தாண்டிக்குடி சாலையில் இருக்கிறது அழகர் பொட்டல் குடியிருப்புப் பகுதி. அங்குள்ள மாங்காய் குடோனில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவல் சொல்லி, வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீஸார், மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீப்பிடித்ததைக் கண்டுபிடித்தனர்.

மாங்காய் குடோன்
மாங்காய் குடோன்

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வாலிபர் ஒருவர், பெட்ரோலை பாட்டிலில் வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குச் செல்வது சிசிடிவி காட்சியில் தெரியவந்தது. தொடர்ந்த விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ராஜாங்கம் என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு, போலீஸாரே அதிர்ச்சியாகி விட்டனர்.

புதுக்கோட்டை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

அழகர் நகர் பொட்டல் குடியிருப்பில் குடியிருக்கும் தனது காதலியைச் சந்திப்பதற்காகச் செல்லும்போது மற்றவர்கள் கவனத்தைத் திசை திருப்ப மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், குடோன் கூரை தீப்பிடித்தபோது, அனைவரும் வெளியே வந்து தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது காதலியை சந்தித்ததாகவும் ராஜாங்கம் கூறியுள்ளார் .

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இச்சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸார் ராஜாங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு