Election bannerElection banner
Published:Updated:

ஜோலார்பேட்டை: காதல் மனைவியைப் பிரித்த பெண் வீட்டார் - அதிர்ச்சி முடிவெடுத்த இளைஞர்

சக்தி முருகன்
சக்தி முருகன்

காதல் மனைவி அடைத்துவைக்கப்பட்டிருந்த உறவினர் வீட்டு முன்பு இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம், ஜோலார்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள சந்திரபுரம் செட்டிப்பட்டறையைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவருக்கு வயது 28. கட்டட வேலை செய்துவந்த சக்தி முருகனுக்கு வண்ணார் வட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை

இந்த திருமணத்தைப் பெண் வீட்டார் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். சக்தி முருகனிடமிருந்து தங்களது மகளைப் பிரித்த பெற்றோர், ஏலகிரி கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தங்கவைத்துள்ளனர். தாய் மாமனுடன் அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த சக்தி முருகன் காதல் மனைவி அடைத்துவைக்கப்பட்டிருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்தப் பெண்ணை சகிதியிடம் பேச விடாமல் பெண்ணின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சக்தி முருகன் அந்த வீட்டின் முன்பு நின்றபடியே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

சக்தி முருகன்
சக்தி முருகன்

வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையறிந்த அந்த இளைஞரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். மேலும், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு