Published:Updated:

பார்வைக் குறைபாட்டால் பொய்த்த ராணுவக் கனவு - மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

தற்கொலை
News
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

ராணுவத்தில் சேர முடியவில்லையே என்ற விரக்தியிலிருந்த அவர் இது பற்றி நண்பர்களிடமும் புலம்பியிருக்கிறார். பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆலங்குளம் அருகிலிருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவரின் மூன்று மகன்களில், மூத்த மகன் கேரளாவில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இரண்டாவது மகன் அடைக்கலராஜ் என்ற அருள்.

அருள்
அருள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

25 வயது நிரம்பிய அருள், சிறு வயது முதலாகவே ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருந்துவந்திருக்கிறார். அதற்காக அதிகாலையில் எழுந்து ஓடுவது, உடற்பயிற்சிகளைச் செய்வது எனத் தன்னைத் தயார்ப்படுத்திவந்திருக்கிறார்.

நெல்லை, பேட்டையிலிருக்கும் தனியார் கல்லூரியில் படித்த அருள், தன் நண்பர்களிடமும் ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற விருப்பத்தை அடிக்கடி தெரியப்படுத்திவந்திருக்கிறார். படிப்பு முடிந்த பிறகு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம்களில் தவறாமல் பங்கேற்றுவந்திருக்கிறார்.

ராணுவம்
ராணுவம்
சித்தரிப்புப் படம்

தொடக்கத்தில் உடல் தகுதியிலேயே அவர் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு உடல் தகுதித் தேர்வில் சிறப்பாகப் பங்கேற்றிருக்கிறார். பின்னர் கண் பரிசோதனை நடந்தபோது பார்வைக் குறைபாடு காரணமாக ராணுவ சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல்போனதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ராணுவத்தில் சேர முடியவில்லையே’ என்ற விரக்தியிலிருந்த அவர் இது பற்றி நண்பர்களிடமும் புலம்பியிருக்கிறார். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர், இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கு
தூக்கு

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் அருள் தற்கொலை செய்த சம்பவம் மருதம்புத்தூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.