Published:Updated:

`புது நம்பர்ல இருந்து போன்... அழுத்தியதும் வெடிச்சுருச்சு!’ - ராணிப்பேட்டையைப் பதறவைத்த இளைஞர்

படுகாயமடைந்த வெங்கடேசன்
படுகாயமடைந்த வெங்கடேசன்

செல்போன் வெடித்துச் சிதறியதால், பலத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (32), எலக்ட்ரீசியன். இவருக்குத் திருமணமாகி அஞ்சலி என்ற மனைவியும் பெண் குழந்தையும் உள்ளனர்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

வெங்கடேசன் நேற்றிரவு வீட்டருகே உள்ள பொதுக் கழிப்பிடத்தின் அருகில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். கொசுக்கள் அதிகளவில் இருந்ததால், அங்குள்ள குப்பைகளைச் சேர்த்துப் புகை மூட்டுவதற்காகக் கொளுத்தியுள்ளார்.

அப்போது, குப்பையில் கிடந்த மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் வெங்கடேசனின் முகம், கை, வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், வலி தாங்கமுடியாமல் கதறி துடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

செல்போன்
செல்போன்
மாதிரி படம்

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களிடம், `எனக்குப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அட்டன் செய்துபேச முயன்றேன். அப்போது, போன் வெடித்துச் சிதறியது’ என்று வெங்கடேசன் கூறியுள்ளார்.

வீடுகளில் விரிசல், தூள் தூளான ஜன்னல்,கதவு; வெடித்துச் சிதறிய டி.வி!-அதிகாலையில் அலறிய ஆற்காடு மக்கள்

இச்சம்பவம் தொடர்பாக, ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா, வாலாஜாபேட்டை இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் விசாரணை நடத்தியதில், `செல்போன் வெடிக்கவில்லை. வெங்கடேசன் எதையோ மறைக்கிறார்’ எனத் தெரியவந்துள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவமனை

``வெங்கடேசன் குப்பையைக் கொளுத்தியபோது, அதில் ரசாயன பாட்டில் போன்ற எதாவது ஒரு பொருள் வெடித்திருக்கலாம் அல்லது வேட்டைக்காக வெடிமருந்து தயாரித்தபோது சம்பவம் நேர்ந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு