Published:Updated:

கரூர்: சாலையில் நின்ற கன்டெய்னர்; கடத்திய இளைஞர்! - சினிமாவை விஞ்சிய 'சேஸிங்' செய்து மீட்ட போலீஸ்

கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி
News
கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி

கன்டெய்னர் லாரியை டீக்கடை ஓரமாக நிறுத்திவிட்டு, டீ குடித்துக்கொண்டிருந்தார். இன்ஜினை ஆஃப் செய்யாமல், சாலையோரமாக நிறுத்தியிருந்தார். அப்போது, கன்டெய்னர் லாரியில் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென வாகனத்தை இயக்கி வேகமாக ஓட்டிச் சென்றார்.

டீ குடிப்பதற்காக சாலை ஓரம் தான் ஓட்டிவந்த கன்டெய்னர் லாரியை டிரைவர் ஆஃப் செய்யாமல் நிறுத்திவிட்டுச் செல்ல, அதைத் திருடும் நோக்கத்தோடு கடத்தி ஓட்டிச் சென்ற இளைஞரை போலீஸார் சினிமா பாணியில் சேஸிங் செய்து விரட்டிப் போய் மடக்கி, கன்டெய்னர் லாரியை மீட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி
கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தூத்துக்குடி மாவட்டம், பூவாணி பகுதியைச் சேர்ந்தவர் வேல்சக்கய்யா (வயது 49). இவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். தருமபுரியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு பதப்படுத்தப்பட்ட வெள்ளரிக்காய் ஊறுகாய் பெட்டிகளை கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு, தூத்துத்துக்குடி நோக்கிச் சென்றார். காஷ்மீர் டு கன்னியாகுமரி சாலையில் சென்றபோது, கரூர் மாவட்டத்திலுள்ள ஆட்டையம்பரப்பு என்ற இடத்தில் லாரியை டீக்கடை ஓரமாக நிறுத்திவிட்டு, டீ குடித்துக்கொண்டிருந்தார். வாகனத்தின் நிலை கருதி, இன்ஜினை ஆஃப் செய்யாமல், வாகனத்தை இயக்கியபடியே சாலையோரமாக நிறுத்தியிருந்தார். அப்போது, கன்டெய்னர் லாரியில் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென வாகனத்தை இயக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். அதைக் கண்ட வேல்சக்கய்யா, செய்வதறியாது திகைத்தார். பிறகு வேல்சக்கய்யா, டீக்கடை உரிமையாளர் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையிலிருந்த போலீஸாருக்குத் தகவல் அளித்தார்.

கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி
கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார், கன்டெய்னர் லாரியை விரட்டிச் சென்றனர். சினிமா பாணியில் கன்டெய்னர் லாரியை போலீஸார் விரட்டிச் செல்வதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்தநிலையில், புத்தாம்பூர் ஜவுளிபூங்கா அருகே கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற நபரை மடக்கிப் பிடித்தனர். மேலும், கன்டெய்னர் லாரியைத் திருடிச் சென்ற, சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சின்னத்தாம்பட்டி ராம்ஜித் மாலனி (எ) ராமமூர்த்தி (வயது 27) என்ற இளஞரை, தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் கன்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீஸார் மடக்கிப் பிடித்த சம்பவத்தால், போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.