Published:Updated:

மும்பை: மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த நண்பன் அடித்துக் கொலை... 8 பேர்கொண்ட கும்பல் கைது

சித்திரிப்புப் படம்

மும்பையில் மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த நண்பனை அடித்துக் கொலைசெய்த 8 பேர்கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.

மும்பை: மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த நண்பன் அடித்துக் கொலை... 8 பேர்கொண்ட கும்பல் கைது

மும்பையில் மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த நண்பனை அடித்துக் கொலைசெய்த 8 பேர்கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

மும்பை அந்தேரி பகுதியிலுள்ள செவன் பங்களா பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்பவர், இரவு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் அவரின் நண்பர் அஜய் சிங்கும், அவரின் நண்பர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சூரஜ் வருவதைப் பார்த்த அஜய்யும், அவரின் நண்பர்களும் சேர்ந்து சூரஜ்ஜை நிறுத்தி மது வாங்கப் பணம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சூரஜ் பணம் கொடுக்க மறுத்தார்.

கொலை
கொலை

இதனால் மது வாங்கப் பணம் கேட்டவர்கள், தங்களிடமிருந்த கம்பால் சூரஜ்ஜை அடித்தனர். இதில் சூரஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அஜய்யும், அவரின் நண்பர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் இந்தச் சம்பவம் குறித்து, தனது மற்றொரு நண்பரிடம் தெரிவித்தார்.

அந்த நண்பர் இது குறித்து சூரஜ் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் விரைந்து வந்து சூரஜ்ஜை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைச் சோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே சூரஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சூரஜ்ஜின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இந்தக் கொலை தொடர்பாக சூரஜ்ஜின் நண்பர்கள் அஜய் உட்பட எட்டு பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism