Published:Updated:

சென்னை: பெண்ணிடம் அத்துமீறல்... கட்டடத் தொழிலாளி கொலையில் கைதான இருவர்!

கொலை
கொலை

சென்னையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரைக் கொலை செய்த இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வடமாதி மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்கிற சைன் (35). இவர் சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியில் கட்டட வேலை செய்துவந்தார். கடந்த 5.5.2021-ல் குமார், சாந்தி காலனியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது குறித்து கட்டடப் பணி நடைபெறும் இடத்தின் மேலாளர் ஜிம்ஜெரால்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். குமாரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சடலம்
சடலம்
Representational Image

குமார் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``குமார் வேலை செய்யும் இடத்தில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவைச் சேர்ந்த ஆசா (23) என்பவர் வேலைபார்த்திருக்கிறார். ஆசாவும் திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையத்தைச் சேர்ந்த ராஜாவும் (34) பழகிவந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் ஆசாவிடம் குமார் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ஆசா, குமாரைக் கொலை செய்ய ராஜாவிடம் கூறியிருக்கிறார்

இதையடுத்து குமாரைக் கொலை செய்ய ராஜாவும் ஆசாவும் திட்டமிட்டனர். சம்பவத்தன்று குமாரின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்திருக்கின்றனர். பின்னர் எதுவும் நடக்காததுபோல இருவரும் அமைதியாக இருந்திருக்கின்றனர். குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அதன் அடிப்படையில் குமாருடன் வேலை பார்த்துவரும் ராஜா, ஆசா ஆகியோரிடம் விசாரித்தபோதுதான் குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சென்னை: அதிமுக பிரமுகரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவி - காட்டிக்கொடுத்த சாக்கு மூட்டை!
கொலை
கொலை

இதையடுத்து இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தற்கொலை வழக்கைக் கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம்" என்றனர்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தில் கட்டடத் தொழிலாளியை, சக தொழிலாளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு