Published:Updated:

ராணிப்பேட்டை: மீன் பிடித்ததில் தகராறு; இளைஞர் கொடூரக் கொலை, வீடுகள் சூறை - களேபரமான கிராமம்

மறியல்

மீன் பிடித்த தகராறில், இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில், வீடுகளும் சேதப்பட்டதால் ஒரு கிராமமே களேபரமாக மாறியிருக்கிறது.

ராணிப்பேட்டை: மீன் பிடித்ததில் தகராறு; இளைஞர் கொடூரக் கொலை, வீடுகள் சூறை - களேபரமான கிராமம்

மீன் பிடித்த தகராறில், இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில், வீடுகளும் சேதப்பட்டதால் ஒரு கிராமமே களேபரமாக மாறியிருக்கிறது.

Published:Updated:
மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகேயுள்ள பாவேந்தர் நகரைச் சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி. இவர், அங்குள்ள விளாரி ஏரியை மீன் பிடிப்பதற்காகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். இவருக்குத் தெரியாமல், திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் 22 வயது மகன் கலையரசனும், அவரின் நண்பர்களும் சேர்ந்து, இரவு நேரங்களில் விளாரி ஏரியில் மீன் பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கலையரசன் தரப்புக்கும் சுப்பிரமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திமிரி காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்தும் நடந்திருக்கிறது.

சம்பவப் பகுதி
சம்பவப் பகுதி

இதற்கிடையே, மதுபாட்டில்களைக் கள்ளத்தனமாகப் பதுக்கி விற்பனை செய்ததாக, கடந்த 24-ம் தேதி ஏரி குத்தகைதாரர் சுப்பிரமணியை போலீஸார் கைதுசெய்து, சிறையிலடைத்தனர். குத்தகைத்தாரர் சிறையிலிருந்த சமயத்திலும் கலையரசன் தரப்பினர் மீண்டும் ஏரிக்குள் அத்துமீறி வலைவிரித்து மீன் பிடித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையறிந்த குத்தகைத்தாரர் சுப்பிரமணியின் அண்ணனும், ராமப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவருமான தினகரன் என்பவர் கலையரசன் தரப்பினரை எச்சரித்திருக்கிறார். இதனால், அவர்களுக்கு இடையேயான மோதல் வீரியமடைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆத்திரத்திலிருந்த கலையரசன் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு நேற்றைய தினம் தினகரன் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டியிருக்கிறார். மிரட்டல் கைகலப்பாக மாறவே, தினகரனை வெட்ட முயன்றிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் எதிர்த்தரப்பினரிடமிருந்து கத்தியை லாகவமாகப் பிடுங்கி, பதில் தாக்குதல் கொடுத்திருக்கிறார். இருதரப்பும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில், கலையரசனுக்கு பலத்த வெட்டு விழுந்ததால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, கலையரசன் தரப்பினர் கூடுதலாக சம்பவ இடத்துக்கு வரவே பதற்றம் மேலும் தொற்றிக்கொண்டது.

மறியல்
மறியல்

கொலை நடந்த தினகரன் வீட்டை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். வெளியே இருந்த காய்கறிக் கடை மற்றும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று டூ வீலர்களையும் அடித்து துவம்சம் செய்தனர். மேலும், அங்குள்ள மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஒருசிலர் திமிரி-ஆரணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. தகவலறிந்ததும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இது குறித்து, திமிரி போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து, குற்றவாளிகளைத் தேடிவருகிறார்கள். இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி கொலை செய்யப்பட்ட கலையரசன் தரப்பினர் இன்று காலை ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த கிராமமே பதற்றமான நிலையில் காணப்படுகிறது.