Published:Updated:

கரூர்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! - 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் ( நா.ராஜமுருகன் )

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீஸார், எலெக்ட்ரீஷியன் ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலைத் தேடிவருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே எலெக்ட்ரீஷியனைப் பட்டப்பகலில் ஆள் நடமாட்டமுள்ள பகுதியில், ஆறு பேர்கொண்ட கும்பம் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார்
கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார்
நா.ராஜமுருகன்
கரூர்: `மகள்களின் படிப்புக்குப் பணம் புரட்ட முடியவில்லை' - விபரீத முடிவெடுத்த தந்தை

திருச்சி மாவட்டம், தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோயில் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 27). எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இவருக்கு திருமணமாகி, புனிதவள்ளி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்தநிலையில், ரஞ்சித்குமார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அறை எடுத்துத் தங்கி, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்திருக்கிறார். விடுமுறையில் மட்டும் சொந்த ஊருக்குச் சென்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை
நா.ராஜமுருகன்

இந்தச் சூழலில், நேற்று தனது இருசக்கர வாகனத்தில், மூலிமங்கலம் பிரிவு சாலையிலுள்ள ஒரு டீக்கடைக்கு வந்து டீக்குடித்துவிட்டு, அறைக்கு மீண்டும் புறப்படத் தயாராகியிருக்கிறார். அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பதறிப்போன அவர் சுதாரிப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில், அந்தக் கும்பல் அரிவாளால் ரஞ்சித்குமாரைச் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் உயிருக்குப் போராடினார்.

சென்னை: அக்காவைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை! - சிக்கியது எப்படி?

இதைக் கண்ட அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு வந்து, ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம்
நா.ராஜமுருகன்

இதையடுத்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீஸார், எலெக்ட்ரீஷியன் ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்த ஆறு பேர்கொண்ட கும்பலைத் தேடிவருகின்றனர். இந்தக் கொலைக்கு காரணம், பெண் விவகாரமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர். பட்டப்பகலில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் துள்ளத் துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு