Published:Updated:

நெல்லை: மது விருந்து; தலைக்கேறிய போதை! - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொடூரம்

முருகானந்தம், திடீரென அருகிலிருந்த இரும்புக்கம்பியால் ரமேஷின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்.

நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் மகன் ரமேஷ் (32). ரமேஷ் பெயின்டிங் வேலை செய்துவந்தார். ரமேஷுக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்குப் பெண் பார்த்துவந்தார்கள்.

மது விருந்து நடந்தபோது கொலையான ரமேஷ்
மது விருந்து நடந்தபோது கொலையான ரமேஷ்

இந்தநிலையில், ரமேஷுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். ரமேஷ் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு விருந்துவைத்திருக்கிறார். அப்போது, டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்ததால், அனைவரும் திசையன்விளை டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு நவ்வலடி சாலையில் தனியார் வங்கி அருகில் அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர்.

அப்போது, மது போதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியிருக்கிறது. ரமேஷுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அவரின் நண்பர் முருகானந்தம், திடீரென அருகிலிருந்த இரும்புக்கம்பியால் ரமேஷின் தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறார். அதில் படுகாயமடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்தார்.

கொலை
கொலை
representational image
தென்காசி: மது விருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

அதையடுத்து, அவரின் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ரமேஷை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ரமேஷை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்த முருகானந்தம் என்ற இளைஞரைக் கைதுசெய்தனர்.

கொலை செய்ததாகக் கைதான முருகானந்தம்
கொலை செய்ததாகக் கைதான முருகானந்தம்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையான ரமேஷ், கைதாகியிருக்கும் முருகானந்தம் ஆகியோர் மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதனால், இந்த விவகாரம் சாதிய மோதலாக மாறிடாமல் தடுக்கும் வகையில், போலீஸார் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு