Election bannerElection banner
Published:Updated:

சென்னை: வியாசர்பாடி மேம்பாலம்; குழந்தையின் அழுகுரல்; இறந்துகிடந்த கர்ப்பிணி - அதிர்ச்சிப் பின்னணி

கொலை
கொலை

காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனின் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னை மனைவியின் கொலையில் முடிந்திருக்கிறது.

சென்னை, கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு விஜயலட்சுமி (20) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். விஜயலட்சிமியின் பெற்றோர் வீடு புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் இருக்கிறது. ரவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி, அவரின் தாய் வீட்டிலிருந்தார். மார்ச் 31-ம் தேதி இரவு விஜயலட்சுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ரவி புளியந்தோப்புக்குச் சென்றிருக்கிறார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதை விஜயலட்சுமியின் தந்தை வெங்கடேஷ் தட்டிக்கேட்டபோது, அவரை ரவி தாக்கியிருக்கிறார். அதனால் வெங்கடேஷுக்கு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொலை
கொலை
representational image

இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி அதிகாலையில் விஜயலட்சுமிக்கும் ரவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் விஜயலட்சுமியிடமிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ரவி சென்றதும், அவரைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. அப்போது, வியாசர்பாடி மேம்பாலத்தின் கீழ் ரவி சென்று கொண்டிருக்கும்போது, அவரைப் பிடித்த விஜயலட்சுமி குழந்தையைத் தன்னிடம் கொடுக்கும்படி கூறி சண்டையிட்டிருக்கிறார். இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த ரவி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் விஜயலட்சுமியைக் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் ரவி அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவலறிந்த வியாசர்பாடி போலீஸார் விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போதையிலிருந்த ரவியை போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீஸார் கூறுகையில் ``கைதுசெய்யப்பட்ட ரவி, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். ரவியின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தன் தாய் வீட்டுக்குக் குழந்தையுடன் விஜயலட்சுமி சென்றுவிட்டார். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு விஜயலட்சுமியுடன் தகராறு செய்தபோதுதான் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது. ரவி மீது கொடுங்கையூர், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.

கொலை
கொலை
Representational Image

விஜயலட்சுமியின் அம்மா வெண்ணிலா, வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் குடும்பத்துடன் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் குடியிருந்துவருகிறேன். எனக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகின்றன. எனக்கு விக்னேஷ் (22) என்ற மகனும் விஜயலட்சுமி (20) என்ற மகளும் இருக்கிறார்கள். விக்னேஷ், வியாசர்பாடியில் உள்ள மெட்ரோ வாட்டர் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்துவருகிறான். கடந்த மூன்றாண்டுக்கு முன்பு கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்த ரவி என்கிற சொலிசன் ரவி என்பவரை விஜயலட்சுமி காதலித்து, எங்களது சம்மதம் இல்லாமல் கோயிலில்வைத்து திருமணம் செய்துகொண்டார்.

சென்னை: சித்த வைத்தியரின் மனைவி கொலை - சீடனாக அறிமுகமானவரால் நேர்ந்த விபரீதம்!

விஜயலட்சுமிக்கும் ரவிக்கும் ஒன்றரை வயதில் சிவா என்ற கைக்குழந்தையும் உள்ளது. விஜயலட்சுமி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். தினமும் குடித்துவிட்டு விஜயலட்சுமியை ரவி அடித்து துன்புறுத்துவான். அதனால் அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள். அவ்வப்போது, ரவி எங்கள் வீட்டுக்கு வந்து என்னையும் என் கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவான். அதற்கு பயந்து விஜயலட்சுமி, ரவியுடன் சென்றுவிடுவாள்.

இந்தநிலையில், விஜயலட்சுமியை ரவி அடித்துத் துன்புறுத்தியதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவள் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள். மார்ச் 31-ம் தேதி, இரவு 11:50 மணிக்கு ரவி வீட்டுக்கு வந்தான். அப்போது எனது கணவர் வெங்கடேசனிடம் விஜயலட்சுமியை வீட்டுக்கு அனுப்பும்படி வற்புறுத்தினான். அதற்கு என் கணவர் மறுப்பு தெரிவித்ததும் ஆத்திரமடைந்த ரவி, செங்கல்லை எடுத்து அவரது தலையில் அடித்துக் காயப்படுத்தினான். அதைப் பார்த்த விஜயலட்சுமி, `எதுக்குடா என் அப்பாவை அடிக்கிற’ என்று தடுத்தாள். அப்போது ஏற்பட்ட தகராறில் பேரன் சிவாவை தூக்கிக்கொண்டு ரவி கிளம்பிவிட்டான். அதனால் விஜயலட்சுமியும் பின்தொடர்ந்து சென்றாள்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

அந்தநேரத்தில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் என் கணவர் வெங்கடேஷ் புகார் கொடுக்கச் சென்றுவிட்டார். நானும் என் மகனும் விஜயலட்சுமியைத் தேடிக்கொண்டு சென்றோம். 1.4.2021-ம் தேதி அதிகாலை நேரத்தில் வியாசர்பாடியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பேரனின் அழுகைக் குரல் கேட்டது. உடனே நானும் என் மகனும் அங்கு சென்று பார்த்தபோது, விஜயலட்சுமியின் மேல் அமர்ந்திருந்த ரவி, பீர்பாட்டிலால் அவளின் தொண்டைப் பகுதியில் குத்திக்கொண்டிருந்தான். உடனே நானும் என் மகனும் சத்தம் போட்டபடி அருகில் சென்றோம்.

அப்போது உடைந்த பாட்டிலோடு ரவி ஓடிவிட்டான். விஜயலட்சுமி, தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தாள். அவளின் அருகில் பேரன் சிவா அழுதுகொண்டிருந்தான். எனவே, என் மகளை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வழக்கு பதிந்து ரவியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு