Published:Updated:

கஞ்சா தகராறில் கழுத்தில் விழுந்த கத்திக்குத்து!? - நள்ளிரவில் ஆவடி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

ஆவடி பகுதியில் கழுத்தில் கத்திக்குத்துக் காயங்களுடன் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர்
கொலை செய்யப்பட்ட இளைஞர்

ஆவடி ஆர்ச், அந்தோணி நகரில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடதுக்குச் சென்றனர். சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர்
கொலை செய்யப்பட்ட வாலிபர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் இந்தக் கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் உள்ளன. அந்த நபர் அணிந்திருந்த சட்டை முழுவதும் ரத்தமாக இருந்தது. மேலும், தரையிலும் ரத்தம் கொட்டிக்கிடந்தது. சில மணி நேரத்துக்கு முன்புதான் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும்.

கொலை நடந்த இடத்தில் சிசிடிவிக்கள் இல்லை. இதனால் அந்த இடத்துக்குச் சென்றவர்கள் குறித்த விவரங்களை மெயின் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்துவருகிறாம். ஆட்டோ ஒன்று கொலை நடந்த இடத்துக்குச் செல்லும் காட்சி கிடைத்துள்ளது. அந்த ஆட்டோவில் வந்தவர்கள்தாம் இந்தக் கொலையில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடத்திவருகிறோம். செல்போன் சிக்னல் மூலமாகவும் கொலையாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதையும் கொலையாளிகளையும் கண்டறிந்துவிடுவோம்" என்றனர்.

MURDER
MURDER

இதுகுறித்து ஆவடிபகுதி மக்கள் கூறுகையில், ``ஆவடி, வில்லிவாக்கம், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் 10 முதல் 20 பேர் வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கஞ்சா போதைக்கு அடிமையாகும் வாலிபர்களால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில்கூட கஞ்சா போதையிலிருந்த வாலிபர் பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்த சம்பவம் நடந்தது. மேலும், கஞ்சா போதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன. ஆவடி ஆர்ச், அந்தோணி நகரில் நடந்த கொலை சம்பவம்கூட கஞ்சா மோதலில் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வீட்டில் சடலமாகக் கிடந்த கணவர், கர்ப்பிணி மனைவி, 8 வயதுக் குழந்தை!- மேற்கு வங்கத்தை உலுக்கிய கொலை

கஞ்சா விற்பனை குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்துவருகிறது. கஞ்சா வியாபாரிகளும் காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளும் கைகோத்துக்கொண்டு செயல்படுவதால் கஞ்சா விற்பனை தங்கு தடையின்றி நடந்துவருகிறது. எனவே, காவல்துறையில் உள்ள உயரதிகாரிகள் தலையிட்டு கஞ்சா விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் கொதிப்புடன்.