Published:Updated:

சென்னை: உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை! - பழிக்குப் பழியாக இளைஞர் கொலை

கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி பாண்டியன்
கொலை செய்யப்பட்ட கூலித் தொழிலாளி பாண்டியன்

சென்னையில் மீன்வியாபாரி கொலை வழக்கில் கைதான இளைஞர் ஜாமீனில் வந்தார். பிறகு இரண்டு மாதங்கள் தலைமறைவாக வாழ்ந்த அவரை மீன்வியாபாரியின் உறவினர்கள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை அடுத்த ஆவடி அருகே அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பாட்டாளி தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (32). கூலித்தொழிலாளி. இவரின் மனைவி அறிவு நிலா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஜூன் 5-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பாண்டியன் என்பவர் கொலைசெய்யப்பட்டார்.

கொலை
கொலை
representational image

இந்த வழக்கில் கூலித் தொழிலாளி பாண்டியனை போலீஸார் கைதுசெய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட கூலித் தொழிலாளி பாண்டியன், ஆகஸ்ட் மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். உயிருக்கு பயந்து அவர், அயப்பாக்கம் வீட்டுக்கே செல்லாமல் இரண்டு மாதங்களுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். குடும்பச் செலவுக்காக மட்டும் அவ்வப்போது மனைவியிடம் பாண்டியன் பணம் கொடுத்துவந்தார்.

இந்தநிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை செய்த கூலித் தொழிலாளி பாண்டியன், நேற்றிரவு அயப்பாக்கம் வீட்டுக்கு வந்தார். பின்னர் பைக்கில் அவர் அன்னை அஞ்சுகம் நகர், அம்பேத்நகர் தெருவில் வந்தபோது ஆட்டோவில் வந்த கும்பல் வழிமறித்தது. பின்னர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நான்கு பேர் கும்பல் பாண்டியனை சரமாரியாக வெட்டியது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை
கொலை
representational image

இது குறித்துத் தகவலறிந்ததும் துணை கமிஷனர் தீபா சத்யன், ஆவடி உதவி கமிஷனர் சத்யமூர்த்தி மற்றும் திருமுல்லைவாயல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார், மீன்வியாபாரி பாண்டியன் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கவே கூலித் தொழிலாளி பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். இது தொடர்பாக மீன் வியாபாரியின் தம்பி சகாதேவன் (31), மாமா சக்திவேல் (38) உட்பட நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

தலைமறைவாக வாழ்ந்துவந்த பாண்டியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு