Published:Updated:

திண்டுக்கல்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; முன்னாள் காதலியின் திருமணத்தைத் தடுத்ததுதான் காரணமா?

கொலை

இளைஞர்கள் இருவர் திடீரென கடைக்குள் நுழைந்து ஒருவரை வெட்டும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன. போலீஸார் அந்தக் காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

திண்டுக்கல்: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; முன்னாள் காதலியின் திருமணத்தைத் தடுத்ததுதான் காரணமா?

இளைஞர்கள் இருவர் திடீரென கடைக்குள் நுழைந்து ஒருவரை வெட்டும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன. போலீஸார் அந்தக் காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

Published:Updated:
கொலை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருது என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று சாமிதுரை, மருது தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அது தொடர்பாக இன்று வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் சாமிதுரை அருகேயுள்ள பேக்கரிக்கு சென்று டீ குடித்துவிட்டு திண்பண்டங்களை வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது மருது, அவர் உறவினர் உதயகுமார் ஆகியோர் அரிவாளுடன் வந்து சாமிதுரையை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சாமிதுரை கடையைவிட்டு வெளியேறியபோது அங்கே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் மோதி கீழே விழுந்தார். எழ முயன்ற அவரை மருது, உதயகுமார் ஆகியோர் தலையிலும் கழுத்திலும் வெட்டினர். இதில் நிகழ்விடத்திலேயே சாமிதுரை உயிரிழந்தார்.

கொலை
கொலை

இந்தக் காட்சிகளை பேக்கரி கடைக்குள் அமர்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்கள் பெரும் அச்சத்துடன் பார்த்தனர். கொலை செய்த இருவரும் அரிவாளுடன் மிகவும் சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்றனர்.

இளைஞர்கள் இருவர் திடீரென கடைக்குள் நுழைந்து ஒருவரை வெட்டும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி-யில் பதிவாகியிருந்தன. போலீஸார் அந்தக் காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைதுசெய்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் கொலை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பட்டப்பகலில், மக்கள் அதிகம் கூடும் இடத்தில்வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``சாமிதுரை காதலித்த பெண்ணை மருது திருமணம் செய்ய முயன்றிருக்கிறார். காதலியை மணக்க முடியாத சாமிதுரை வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர், மருதுவுடன் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றபோது, அந்தத் திருமணத்தை தடுக்க சாமிதுரை முயன்றிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், மருதுவுடன் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மருது மற்றும் சாமிதுரை குடும்பங்கள் ஒரே பகுதியில் வசித்துவந்திருக்கின்றனர்.

அதனால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக நேற்று இரண்டு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை மருதுவுக்கும் சாமிதுரைக்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டிருக்கிறது.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

இதையடுத்து வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலைப் பிரிவிலுள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு பொருள்களை வாங்கிக்கொண்டிருந்த சாமிதுரையை மருது, அவர் உறவினர் உதயகுமார் அரிவாள்கொண்டு சரிமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் சாமிதுரை உயிரிழந்தார். கொலை செய்த இருவரையும் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்.

கொலையான சாமிதுரையின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தொடர்புடைய அனைவர்மீதும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்" என்றனர்.