Published:Updated:

`தென்னந்தோப்பில் ஏற்பட்ட வாய்த் தகராறு!' -நாகர்கோவில் போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நண்பர்கள்

உயிரிழந்த வினோத்
உயிரிழந்த வினோத்

`கொலை நடந்தது எப்படி என ஜெனிஸ்டர் கண்விழித்த பிறகு விசாரணை நடத்தினால் தெரியவரும்' என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் (23). இவர் நாகர்கோவிலில் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரும் அனந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டர் (25) என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

வினோத்தின் வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் அவரும் ஜெனிஸ்டரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் வீட்டில் இருந்து வெட்டுக்கத்தி எடுத்துவந்து ஜெனிஸ்டரை வெட்டியுள்ளார்.

இதில், ஜெனிஸ்டருக்கு வயிற்றில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அவரின் நண்பர்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், வினோத் வயிற்றில் குத்தப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் வீட்டின் அருகில் கிடந்துள்ளார். அவரை அப்பகுதியில் உள்ள சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வினோத் உயிரிழந்தார்.

இறந்த நிலையில் வினோத்
இறந்த நிலையில் வினோத்

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ``இருவரும் தென்னந்தோப்பில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் தகராறு ஏற்பட்டதால் வினோத் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துச் சென்று ஜெனிஸ்டரை வெட்டியிருக்கிறார். அதில் காயம் அடைந்த ஜெனிஸ்டரை சிலர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டுசென்றனர்.

`தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா; சென்னையில் 174..’ - சுகாதாரத்துறை  #NowAtVikatan

அதைத் தொடர்ந்து வினோத்துக்கும் வயிற்றில் கம்பியால் குத்துப்பட்டதுபோன்ற காயம் இருந்தது. ஜெனிஸ்டர் குத்தினாரா அல்லது வேறு யாரேனும் குத்தினார்களா என்பது தெரியவில்லை. ட்ரில்லிங் மிஷின் மூலம் குத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்துள்ளார். இரவு ஒன்பது மணிக்கு மேல் நடந்த சம்பவம் என்பதால் என்ன நடந்தது என்பதில் குழப்பம் உள்ளது" என்றனர்.

வினோத்
வினோத்

இதற்கிடையில் ஜெனிஸ்டரை வினோத் வெட்டியதாகவும், வினோத்தை ஜெனிஸ்டர் குத்தியதாகவும் இரண்டு தரப்பு மீதும் ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். `கொலை நடந்தது எப்படி என ஜெனிஸ்டர் கண்விழித்த பிறகு விசாரணை நடத்தினால் தெரியவரும்' என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு