Published:Updated:

ஊரடங்கால் தனியாக சிக்கிய இளைஞர் வெட்டிக் கொலை! - ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய கும்பல் #Lockdown

கொலை செய்யப்பட்ட பாலாஜி
கொலை செய்யப்பட்ட பாலாஜி

திருவள்ளூரில் ஊரடங்கு காரணமாக தனியாக வந்த வாலிபரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், கொடூரமாகக் கொலை செய்து விட்டுத் தப்பிய ஓடியது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை கட்டடத் தொழிலாளி. இவரின் இளைய மகன் பாலாஜி (24). இவர் பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர் வீட்டிலிருந்து சோலையம்மன் நகர் 10 - வது தெருவில் நடந்து வந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் 6 வாலிபர்கள் வந்தனர்.

கொலை
கொலை
`தடம் மாறிய அம்மாவின் வாழ்க்கை; தட்டிக்கேட்ட மகள் கொலை!'- 6 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது

அந்தக் கும்பல் பாலாஜியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளைக்கொண்டு பாலாஜியை வெட்டத் தொடங்கினர். அதனால் நிலைகுலைந்த பாலாஜி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்தக் கும்பல், பாலாஜியை வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றது. பாலாஜியின் தலை, தோள்பட்டை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரி டிஎஸ்பி பவன்குமார் ரெட்டி, சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பாலாஜியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பாலாஜியை வெட்டிக் கொலை செய்த கும்பல் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்
`ஊரடங்கில் தனியாக மாட்டிய காய்கறி வியாபாரி..' - கொலையில் முடிந்த பிறந்தநாள் விழா முன்விரோதம்

சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர் முதல்கட்ட விசாரணையில் பாலாஜிக்கும் அவரை வெட்டிக் கொலை செய்த கும்பலுக்கம் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பாலாஜி மீது சோழவரம், செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜியைக் கொலை செய்தவர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு நேரத்தில் தனியாக நடந்துசென்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு