Published:Updated:

பழனி: துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் படுகாயம் - வனவிலங்கு வேட்டையின்போது நடந்ததா... போலீஸ் விசாரணை!

துப்பாக்கிச்சூடு

நேற்று இரவு மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்திலிருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் கார்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பழனி: துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் படுகாயம் - வனவிலங்கு வேட்டையின்போது நடந்ததா... போலீஸ் விசாரணை!

நேற்று இரவு மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்திலிருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் கார்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு

திண்டுக்கல் மாவட்டம், பழனி, பெத்தநாயக்கன்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், கார்த்தி (24) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்திலிருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் கார்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திக்கு பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், ஏ.டி.எஸ்.பி சந்திரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர்‌. மோப்ப நாயும் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தோட்டத்து வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் 16 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த கார்த்தி
காயமடைந்த கார்த்தி

பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும், அதற்கென நாட்டுத் துப்பாக்கிகளும், ஏர் கன்களும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. எனவே இந்தச் சம்பவம் வேட்டையில் ஈடுபட்டபோது தவறுதலாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்கரன் எஸ்பி
பாஸ்கரன் எஸ்பி

இது குறித்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரனிடம் கேட்டோம். ``ஏர் கன் பயன்படுத்தியதில் வெளிவந்த குண்டு கார்த்தி என்பவரின் இடது தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவருடைய நெஞ்சிலிருந்த ரவை எடுக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். முழுமையான விசாரணைக்குப் பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும்" என்றார்.