Published:Updated:

சென்னை: சிகிச்சைக்காகச் சென்றவர் மர்ம மரணம் - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்தது என்ன?

மரணம்

சென்னையிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சிகிச்சைக்காகச் சென்றவர் மர்ம மரணம் - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்தது என்ன?

சென்னையிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தவர், திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மரணம்

சென்னை ராயப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜி (45). இவர் ஆட்டோவுக்கு கூண்டு கட்டும் வேலை செய்துவந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவரை ராயப்பேட்டை பகுதியிலுள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அவரின் குடும்பத்தினர் சேர்த்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை ராஜியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜியின் மனைவி கலா, குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மரணம்
மரணம்

இதையடுத்து ராஜியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ராஜியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். அதன்பேரில் போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள், ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸார், ``ராஜியை அடித்தே கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் புகாரளித்திருக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினோம். அதில் ராஜி அணிந்திருந்த உடையில் ரத்தக்கறைகள் இருந்தது தெரியவந்தது. உடைந்த நிலையில் சில பிரம்புகளையும் கைப்பற்றியுள்ளோம். அது தொடர்பாக மையத்தின் மேலாளர் மோகன், ஊழியர்கள் ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் ராஜியின் உடலில் பிரம்பால் அடித்ததற்கான காயங்கள் இருப்பதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பற்களும் உடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

ராஜி
ராஜி

உயிரிழந்தவரின் சகோதரி முனியம்மா, ``என் தம்பியை போதை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொலை செய்துவிட்டனர். போதைப் பழக்கத்திலிருந்து தம்பியை மீட்பதற்காகத்தான் அங்கு சேர்த்தோம், ஆனால் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜியை சித்ரவதை செய்து அடித்தே கொலை செய்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism